நீங்கள் எக்ஸ்மேன் ஆவதற்கு அரிய வாய்ப்பு…!

நீங்கள் எக்ஸ்மேன் ஆவதற்கு அரிய வாய்ப்பு…!

எக்ஸ்மேன் என்றாலே, வோல்வரின் கதாபாத்திரம்தான் நினைவுக்கு வரும். வோல்வரினாக  நடிக்கும்  ஹுயூ ஜேக்மேன்  கைமுட்டியை ஆக்ரோஷமாக மடக்கியதும் விரல்களில் இருந்து கத்திகள் முளைத்து எதிரிகளை விதம்விதமாக பதம்பார்ப்பார். அவர் இப்போது, ’இனிமேலும் என் கைகளுக்குள் கத்திகளை மறைத்துவைக்க முடியாது. வோல்வரின் கதாபாத்திரத்தில் இருந்து விடைபெறுகிறேன்’ என்று டாட்டா காட்டியிருக்கிறார். இப்போது தயாரிப்பில் இருக்கும் எக்ஸ்மேன்: அபாகலிப்ஸ், வொல்வரின் 3 படங்களுக்கான ஒப்பந்தம் முடிந்ததும் விடைபெறுகிறாராம். இந்த இரண்டு படங்களும் 2016, 2017 ஆண்டுகளில் வெளியாகின்றன. இந்தப் படங்களையும் சேர்த்து ஏழு படங்களில் வோல்வரின் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் ஜேக்மேன். இந்த திடீர்(?) முடிவுக்குக்  காரணமாக அவரது மனைவியைத்தான்  கைகாட்டுகிறார்.  தினமும்  உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருப்பதும், ஏகப்பட்ட நான் வெஜ் ஐட்டங்களைத் தின்று தீர்ப்பதையும்  மிகவும் இடைஞ்சலாக கருதுகிறாராம் அவர்  மனைவி டெபொரா-லீ ஃபர்னீஸ்.  இத்தனை வருடங்களாக மனைவி…

Read More