சிம்புவின் எதிரிகள் யார்?

சிம்புவின் எதிரிகள் யார்?

நடிகர் சங்கத் தேர்தலில் பழம் தின்று கொட்டை போட்ட ராதாரவி, சரத்குமார் போன்றவர்கள் ஒருபக்கம் நிற்க, விஷால், நாசர் போன்றவர்கள் நேருக்கு நேராக நின்று எதிர்ப்புக்குரல் கொடுக்கிறார்கள். இது வரவேற்கத்தகுந்த நிகழ்வுதான். நடிகர்களுக்குள் மோதல் சகஜம் என்ற நிலையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்திருக்கும் டி.ராஜேந்தர், அவரது மகன் சிலம்பரசனுக்கு எதிராக சிறு கும்பல் சதி  செய்வதாகவும், அதனால்தான் ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்கள் வெளிவர முடியாமல் தவிப்பதாகவும் வழக்கம்போல் அழுது புலம்பி மக்களிடையே அனுதாபம் பெற முயற்சி செய்திருக்கிறார். நான் கருணாநிதியை எதிர்த்தவன், ஜெயலலிதாவுடன் சண்டை போட்டவன், ஒபாமாவை வம்புக்கு இழுத்தவன் என்றெல்லாம் சவடால் பேசும் தைரியசாலியான ராஜேந்தர், ஏன் இப்போது அந்த சிறு கும்பலின் பெயரை வெளிப்படையாக சொல்வதற்கு பயப்படுகிறார் என்பதுதான் ஆச்சர்யம். ‘வாலு’ போன்ற படங்கள் வந்தால் தமிழ் சினிமாவின் சரித்திரம்…

Read More