மரண அவஸ்தை (நமக்கும்தான்) – த ரெவன்னென்ட் 34 மார்க் (The Revenant Review)

மரண அவஸ்தை (நமக்கும்தான்) – த ரெவன்னென்ட் 34 மார்க் (The Revenant Review)

விமர்சனம் – த ரெவன்னென்ட்: அவார்டு போதைக்கு ரசிகர்களை ஊறுகாய் ஆக்கியிருக்கிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. டாம் ஹாங்க்ஸ் நடித்த காஸ்ட் அவே தொடங்கி அப்பல்லோ 13, எவரெஸ்ட் போன்ற ஏகப்பட்ட உயிர் போராட்ட சினிமா பார்த்துவிட்டதாலோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதிவரை அலுப்பும் சலிப்புமாக நகர்கிறது ரெவன்னென்ட். இனி, கொஞ்சமாக தென்படும் கதைக்குப் போகலாம். 1820களில் கதை நடக்கிறது. காட்டு மிருகங்களை வேட்டையாடி தோல் வியாபாரம் செய்யும் ஒரு கும்பல் காட்டுக்குள் முகாம் போட்டிருக்கிறது. ஏராளமான மிருகங்களை வேட்டையாடி முடித்த நேரத்தில், திடீரென அந்தப் பகுதியை சேர்ந்த செவ்விந்தியர்கள் அதிரடி தாக்குதல் நடத்துகிறார்கள். திடீர் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் 30 பேர் செத்துப்போக, க்ளாஸ் ஆக வரும் டிகாப்ரியா உள்ளிட்ட 10 பேர் மட்டும் படகில் தப்பிச்செல்கிறார்கள். தொடர்ந்து படகில் செல்வது ஆபத்து என்பதால், காட்டு வழியே நடந்துசெல்வதே பாதுகாப்பு…

Read More