அப்பப்பப்பப்பப்பா

அப்பப்பப்பப்பப்பா

பாக்காம விட்றாதீங்க – த பர்சூட் ஆஃப் ஹேப்பினெஸ்: அம்மாவின் அன்புக்கும் அப்பாவின் அன்புக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கும். அம்மாவைப் போல் வெளிப்படையாக பாசம் காட்டுவது, உருகுவது, கெஞ்சுவது, சரணடைவது எதுவுமே இருக்காது. பிள்ளையை தள்ளிநின்றுதான் ரசிப்பார். தன் சந்தோஷத்தை வெளிப்படையாக காட்டமாட்டார்.  அதேபோல்  தன்னுடைய சோதனைகளும் வேதனைகளும் பிள்ளைக்குத் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். ஒரு தந்தையின் இப்படிப்பட்ட இயல்பான குணத்தை வைத்து உருவாக்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றதுதான் த பர்சூட் ஆஃப் ஹேப்பினெஸ். ஆக்‌ஷன் படங்களில் நடித்து பெயர் வாங்கிய வில் ஸ்மித்தும், அவரது மகன் ஜேடன் ஸ்மித்தும் இணைந்து நடித்த முதல் படம். கிறிஸ் கார்ட்னர் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் வில் ஸ்மித். தன்னுடைய மொத்த சேமிப்பையும் போட்டு ஒரு ஸ்கேன் மிஷின் தயாரித்து சந்தைப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார் வில் ஸ்மித்….

Read More