பாக்காம விட்றாதீங்க – த இமிடேஷன் கேம் இந்த உலகை ஆட்டிப்படைப்பதற்கு ஹிட்லர் வசம் இருந்த ஒரு வலிமையான ஆயுதம் எனிக்மா. ஒரு டைப்ரைட்டர் போல் இருக்கும் எனிக்மா என்ற இயந்திரத்தின் மூலம் தாக்குதல் நடத்தவேண்டிய இடங்களை சங்கேத வார்த்தைகளாக மாற்றி அனுப்புகிறார்கள் ஜெர்மனியர்கள். இந்த சங்கேத வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் இங்கிலாந்து, பிரான்ஸ், சோவியத் யூனியன் போன்ற நாடுகள் தடுமாறிக்கொண்டிருக்க, கொஞ்சமும் சிரமம் இல்லாமல் முன்னேறிக்கொண்டே இருந்தார் ஹிட்லர். இந்த எனிக்மா அனுப்பும் சங்கேத வார்த்தைகளை கண்டறிவதற்கு 150 மில்லியன் மில்லியன் மில்லியன் சாத்தியக்கூறுகள் இருந்ததால், என்கோடிங்கை உடைப்பது சாத்தியமில்லாமல் போகிறது. இதனை உடைத்தது மட்டுமின்றி இன்றைய உலகை ஆட்டிவைக்கும் கம்ப்யூட்டருக்கு அடித்தளம் போட்ட ஆலன் ட்யூரிங் என்பவரது வாழ்க்கை கதையே த இமிடேஷன் கேம். ஒவ்வொரு போரின் வெற்றிக்குப் பின்பும் ஏராளமான போர்வீரர்களின் தியாகம் இருக்கும், ஆனால் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வெற்றிக்குப் பின்னே…
Read More