பயத்தில் கத்துவதைக் கேட்பதற்கு எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அதனால்தான் குழந்தைகளை பயமுறுத்துகிறேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறது ஒரு பேய். இதைத்தான் இயக்குனர் ஜேம்ஸ் வான்செய்திருக்கிறார். படம் பார்க்கும் ரசிகனை கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் இழுத்து… பேய் வரும்போது அலற வைப்பதில்தான் அமானுஷ்ய படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த வகையில் திக்திக் என திகில் கிளப்புவதால், தி காஞ்சரிங் 2 (The Conjuring 2) – நிச்சயம் பார்க்கவேண்டிய பேய்ப்பட பட்டியலில் சேர்கிறது. வேப்பிலை, திருநீறுடன் நம்மூரு மந்திரவாதிகள் பேய் விரட்டுவதை, கேமரா வைத்துக்கொண்டு விஞ்ஞான முறையில் சிலுவை துணையுடன் செய்கிறார்கள் பாட்ரிக் வில்சனும் அவனது காதல் மனைவி வேரா ஃபார்மிகாவும். ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கே ஆவி இருக்கிறதா என்பதை தன்னுடைய உள்ளுணர்வால் உணரும் சக்தியுடன் இருக்கிறாள் வேரா. ஆவி எதற்காக அட்டகாசம் செய்கிறது என்பதை கண்டறிந்து விரட்டுவதுதான்…
Read More