டெர்மினேட்டர் ஜெனிசிஸ் (Terminator Genisys) ஜஸ்ட் ஃபெயில் 34 மார்க்

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் (Terminator Genisys) ஜஸ்ட் ஃபெயில் 34 மார்க்

வீணாகிப் போன இட்லியில் செய்யப்பட்ட உப்புமாவைப் போலவே இருக்கிறது டெர்மினேட்டர் ஜெனிசிஸ். முதல் முறையாக இந்த டெர்மினேட்டரை ரசிக்கும் குட்டிப் பையன்களுக்கு வேண்டுமானால் இது சூப்பராக இருக்கலாம். கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர் 1984-ல் வெளியான டெர்மினேட்டர் முதல் பாகமும் 1991-ல் வெளியான டெர்மினேட்டர் ஜட்ஜ்மெண்ட் டே படமும் சூப்பர் டூப்பர் ஹிட். ஏனென்றால் அர்னால்ட், ஜேம்ஸ் காம்ரூன் இருவரும் இணைந்து ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிவைத்திருந்தார்கள். அதன்பிறகு மற்றவர்கள் இயக்கத்தில் அடுத்தடுத்து வந்த இரண்டு பாகங்களும் அவுட். இப்போது வந்திருக்கிறது ஐந்தாவது பாகமாக டெர்மினேட்டர் ஜெனிசிஸ். என்ன நடந்தாலும் கதையில் சிறு மாற்றம்கூட பண்ணுவதில்லை என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். இந்தக் கதை 2029-ம் ஆண்டு நடக்கிறது. வழக்கம்போல் எதிர்கால உலகத்தை இயந்திரங்கள் ஆட்சிசெய்ய முயற்சி செய்கின்றன. மனிதர்களை முழுமையாக அழிப்பதற்காக ஸ்கைநெட் தலைமையில் இயந்திரங்கள் களம் இறங்குகின்றன. இந்த இயந்திரங்களின்…

Read More

கமல் பாணியில் அர்னால்டு

கமல் பாணியில் அர்னால்டு

மிரட்ட வருகிறது – டெர்மினேட்டர் ஜெனிசிஸ்: கமலஹாசனிடம் ஒரு நல்ல குணம் உண்டு. புதுப் படத்தில் நல்லபடியாக நாலைந்து கேரக்டர் இருப்பதாகத் தெரிந்தால்… அத்தனை கேரக்டருக்கும் தனித்தனியாக ஆட்களைத் தேடி தயாரிப்பாளர் சிரமப்பட வேண்டாம் என்று நினைத்து, தானே அத்தனை கேரக்டர்களிலும் நடித்துவிடுவார். சென்னைக்கு ‘ஐ’ படவிழாவுக்கு வந்து அவமானப்பட்ட அர்னால்டு, ’உலக நாயகன்’ தந்திரத்தை எப்படியோ தெரிந்துகொண்டு திரும்பியிருக்கிறார். அதனால் அவரதுஅடுத்த படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ்  கமலஹாசனின்  ராஜதந்திரத்தை அமல் படுத்திவிட்டார். ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான டெர்மினேட்டர் முதல் பாகத்தில் வில்லனாக வருவார் அர்னால்டு. அந்தப் படம்தான் அவரை உச்சத்துக்கு கொண்டுபோனது. அதன்பிறகு நாயகனாகி, நல்லவராகவும் மாறிவிட்டார். அதனால் அடுத்தடுத்து வெளியான நான்கு பாகங்களிலும் நாயகனாக நடித்தார். இப்போது  ஐந்தாவது பாகம் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் நாயகனாக வரும் அர்னால்டு வில்லனை பந்தாட…

Read More