சிவாஜி கணேசனுக்கு அவமானம்!

சிவாஜி கணேசனுக்கு அவமானம்!

அன்னை இல்லத்தை மணி மண்டபம் ஆக்கலாமே… ஆளும் அ.தி.மு.க-வை தவிர அத்தனை கட்சிகளும் சேர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டியே தீரவேண்டும் என்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் மாபெரும் சினிமா கலைஞனை, இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது. விருது, புகழ், பணம் எல்லாம் தானாக வரவேண்டுமே தவிர, தேடிப்போகக் கூடாது என்பதில் சிவாஜி கணேசனே உறுதியாக இருந்தவர். இன்று அவரது பெயரைச் சொல்லி, அவ்வப்போது காமெடி ஷோ நடத்துகிறார்கள். மணி மண்டபம் மட்டுமல்ல, அதைவிட அற்புதமான மியூசியம் அமைப்பதற்கே தகுதியான நபர் சிவாஜி கணேசன் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இந்த விஷயத்துக்காக அரசாங்கத்தைக் கெஞ்சத்தான் வேண்டுமா? சிவாஜி கணேசனுக்கு பிறந்த நாள் அல்லது மறைவு நாள் வரும் நேரத்தில் மட்டும்தான் நம் கலைஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தக் கோரிக்கை…

Read More