என்னம்மா இப்படி செத்துச்செத்து காதலிக்கிறீங்க

என்னம்மா இப்படி செத்துச்செத்து காதலிக்கிறீங்க

‘சின் சிட்டி’ விமர்சனம்: ரத்தம் தெறிக்கும் கொலைகளை கலைத்துவமாகக் காட்டமுடியும் என்று நிரூபித்த வகையில் ஃப்ராங்க் மில்லருக்கு மெகா சல்யூட் அடித்துவிட்டுத்தான் விமர்சனத்துக்குள் நுழையவேண்டும். இந்தப் படத்தில் நொடிக்கு நொடி ரத்தம் வழிந்துகொண்டே இருந்தாலும், அத்தனைக்கும் பின்னே காதலே இருக்கிறது. அதுவும் கன்னாபின்னா காதல். படுவித்தியாசமான மூன்று காதல்கள் ஒன்றுக்கொன்று குறுக்கும்நெடுக்குமாக சந்திப்பதுதான் சின் சிட்டி. ஒரு காட்சியில் மூன்று காதலும் சந்திக்கிறது என்பதுதவிர தேவையற்ற குட்டையைக் குழப்பும் திரைக்கதை அமைப்புகள் இல்லை. முதல் காதல் குழந்தைத்தனமும் கவிதை நயமும் நிரம்பியது. 11 வயதில் செக்ஸ் வெறிபிடித்த கும்பலிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய புரூஸ் வில்லிஸை எட்டு வருடங்கள் கழித்து சந்திக்கிறாள் நான்ஸியாக வரும் ஜெசிகா ஆல்பா.  அப்போது புரூஸ் கிட்டத்தட்ட 70 வயது தாத்தாவாக, எந்த நேரமும் மரணத்தைத் தொட்டும் இதய நோயாளியாகவும்  இருக்கிறார். ஜெசிகாவை…

Read More