ஆட்டம் காணும் சான் ஆன்ட்ரியாஸ்: ஆபத்து நேரத்தில் மக்களைக் காப்பாற்றும் உன்னதமான பணியில் இருக்கும் மொட்டை ராக், அப்படியொரு சிக்கல் நேரும்போது ஊர், உலகத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னுடைய மனைவி, மகளை பத்திரமாக காப்பாற்றுவதுதான் கதை. இதுபோன்ற ஆயிரத்தெட்டு கதைகளில் சில்வஸ்டர் ஸ்டோலனும் அர்னால்டும் நடித்ததை ராக் பார்த்ததே இல்லையோ? சரி, கதைக்குள் ஸாரி, அப்படியொன்று இல்லை என்பதால் படத்துக்குள் போகலாம். கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர் கண் எதிரே தன் மகளை காப்பாற்றமுடியாத சூழலுக்கு ஆளான ராக் (கதாப்பாத்திரத்தின் பெயர் – ரே), அடுத்த மகளுக்கும் அப்படியொரு ஆபத்து நேரும்போது என்ன செய்கிறார் என்ற ஒன்லைனை வைத்து கதை பின்னியிருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எப்போதும் ஆரம்பகாட்சி மட்டும் மிரட்டலாக இருக்கும். அப்படியொரு காட்சிக்கு முயற்சித்து மொக்கையாக அமைத்திருக்கிறார்கள். காப்பாற்றுவதற்கு ராக் இத்தனை சிரமப்படுவார் என்று தெரிந்தால், அந்தப் பெண்ணே கதவைத் திறந்துகொண்டு சாதாரணமாக மலையேறி…
Read More