கொஞ்சம் ஜிவ்வு, கொஞ்சம் ஜவ்வு – ரூம் – 42 மார்க் (Room Movie Review)

கொஞ்சம் ஜிவ்வு, கொஞ்சம் ஜவ்வு  – ரூம் – 42 மார்க் (Room Movie Review)

விமர்சனம் – ரூம் : தனியறைக்குள் அடைத்து கொடுமைப்படுத்தும் சைகோ படங்கள் நிறையவே பார்த்துவிட்டோம். அந்த சைகோ எப்படிப்பட்ட கொடியவன் என்பதை காட்டாமல், அறைக்குள் அடைபட்டிருக்கும் அம்மா, மகன் மனநிலை எப்படியிருக்கும் என்று காட்டியவகையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது ரூம்.  அம்மாவும் மகனும் சிரமப்பட்டு தப்பியபிறகு ஏற்படும் மனநிலை பிறழ்வை காட்டி ஜவ்வடிக்கும்போது, நிறையவே சலிப்பும் வருகிறது. ஆனாலும், ஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் பிரி லார்சன் மற்றும் குட்டிப்பையன் ஜேகப் டிரெம்பிளே நடிப்புக்காகவும் பார்க்க வேண்டிய படம் ரூம். காலை கண் விழித்ததும் டி.வி., பெட், சேர், தலையணை, ஷிங்க், பிளேட், கிளாஸ் என கண்ணில் கண்ட அத்தனை பொருட்களுக்கும் குட்மார்னிங் சொல்கிறான் ஜாக். ஆண் பிள்ளையின் பெயராக இருந்தாலும் பெண் பிள்ளை போல் முடி வளர்ந்து தொங்குகிறது. அம்மா ஜாய் அவனுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறாள், குளிக்கிறாள், விளையாடுகிறாள், கதை சொல்கிறாள்,…

Read More