கருணாநிதி, ஸ்டாலினுக்காக ரியல் ஸ்டீல்

கருணாநிதி, ஸ்டாலினுக்காக ரியல் ஸ்டீல்

பாக்காம விட்றாதீங்க – ரியல் ஸ்டீல்: தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கும் அப்பாவுக்காக, அவரது  மகன் எத்தனை தூரம் ரிஸ்க்(?) எடுத்து ரஸ்க் சாப்பிடுவான்? அதாவது   நம்ம கருணாநிதி எத்தனையெத்தனையோ சூட்சுமங்களை எல்லாம் அரசியலில் செயல்படுத்திப் பார்த்தாலும் ஜெயலலிதா முன்பு தோற்றுத்தான்  போகிறார். அப்படி தொடர்ந்து அடிமேல் அடி வாங்கினாலும்  ஆட்டத்தில் இருந்து வெளியேறுவது சரியல்ல என்று ஸ்டாலின் சொல்லிக்கொடுத்து ஜெயிக்க வைப்பதுபோன்ற ஒரு பாசமலர் டைப் கதைதான் ரியல் ஸ்டீல். மனிதர்களும் மனிதர்களும் மோதிக்கொள்வதை மக்கள் ரசிப்பது குறைந்துவிட்ட எதிர்காலத்தில் கதை நடக்கிறது. அதீத சக்தி படைத்த இயந்திரன்கள் மோதுவதைத்தான்  மக்கள் ரசிக்கிறார்கள். அதனால் குத்துச்சண்டை வீரனான  ஹூயு ஜேக்மேன் (எக்ஸ்மேன் படத்தில் கைகளில் இருந்து கத்திகளை விரிப்பாரே அவரேதான்) வாழ்வின் விரக்தியில் இருக்கிறான். தொடர் தோல்வி காரணமாக பணம், மனைவியை இழந்துவிட்டவன்,  தன் சொந்த…

Read More