மூன்று பஞ்சு மிட்டாய்கள் – பிரேமம் (Premam)

மூன்று பஞ்சு மிட்டாய்கள் – பிரேமம் (Premam)

ஜஸ்ட் வாட்ச் – பிரேமம்: அழுத்தமான கதைக்கு இலக்கணமாக மலையாள சினிமா இருந்த காலம் மலையேறிப் போயாச்சு. இன்றைய இளைஞர்களைக் கவர்வதற்கு அழகான புதுமுகப் பெண்களும், ஜாலியான திரைக்கதையும் இருந்தாலே போதும் என்று பிரேமம் படம் மூலம் சொல்லியடித்து ஜெயித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன். கதை என்று எதுவுமே இல்லை என்றாலும் அழகுப் புயல்களாக வலம் வரும் முன்று தேவதைகளுக்காக மட்டுமே பார்க்கலாம் பிரேமம். நம்ம சேரன் கைவண்ணத்தில் வெளியான ஆட்டோகிராப்பின் மலிவுப் பதிப்பு என்றும் பிரேமத்தை சொல்லலாம். கேரளாவை கலக்கிக்கொண்டிருந்த இளம் நடிகர்  பகத் பாசிலை (நஸ்ரியாவை தள்ளிக்கொண்டு போனவர்) பின்னுக்குத் தள்ளிவிட்டு, வேகமாக முன்னேறிவரும் நிவின் பாலி நாயகனாக படம் முழுவதும் மூன்று கெட்டப்களில் வலம் வருகிறார். மீசை இல்லாத பள்ளி வயதில் குட்டிப் புயலாக வரும் அனுபமா பரமேஸ்வரன் அழகில் மயங்குகிறார். செல்ல நாய்க்குட்டி…

Read More