உஷாரய்யா உஷார் – Point Break சூரர்கள் கமிங்

உஷாரய்யா உஷார் – Point Break  சூரர்கள் கமிங்

இறக்கை போன்று ஆடையை பிரத்யேகமாக வடிவமைத்துக்கொண்டு பறக்கும் ஒருவன், சர்ஃபிங்  கில்லாடி ஒருவன், எப்பேர்ப்பட்ட மலைகளிலும் ஏறிவிடும் அசகாய சூரன் ஒருவன், மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரன் ஆகிய நால்வரும் சேர்ந்து உலகப்  பொருளாதாரத்தை அசைத்துப்பார்க்க முடிவு எடுக்கிறார்கள். தங்களால் இதனை  செய்யமுடியும் என்பதைக் காட்டுவதற்காக வங்கிகளுக்கு விமானத்தில் கொண்டுசெல்லப்படும் இரண்டு கண்டெய்னர் பணத்தை, வானில் இருந்து கீழே கொட்டுகிறார்கள். ஒரு கிராமம் முழுவதும் பண மழை பொழிகிறது. இந்தக் கில்லாடிகளின் கொட்டத்தை முறியடிக்க வருகிறான் அதிரடி நாயகன் லூக் பிரேசி.  அவர்களில் ஒருவனாக நுழைந்து, அவர்களின் திட்டத்தை முறியடிக்க நினைக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் செய்வது தவறு இல்லை என்று தெரியவர, அவர்களுடன் இணைகிறான். இதனால் எஃப்.பி.ஐ. கவலை கொள்கிறது. நாயகனை திசை மாற்ற முடியுமா? புதிய சூரர்களிடம் இருந்து நாட்டின் பொருளாதாரத்தைக் காப்ப்பாற்ற முடியுமா…

Read More