ஏமாத்திட்டாரே நிவின் பாலி

ஏமாத்திட்டாரே நிவின் பாலி

பாக்கவே பாக்காதீங்க – ஒரு வடக்கன் செல்பி இந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்திருக்கும் ஒரு வடக்கன் செல்பி படத்தை ஆஹா..ஓஹோ என்று கொண்டாடுகிறது மலையாளத் திரையுலகம். ஐந்து மொழிகளில் இந்தத் திரைப்படம் ரீமேக் செய்யப்படவும் இருக்கிறதாம். மலையாளத்தின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துவரும் நிவின்பாலி நடித்தபடம் என்று ஆர்வமாக உட்கார்ந்தால், உப்பும் உறைப்பும் இல்லாத ஊறுகாய் போலஇருக்கிறது. செல்பி எடுப்பதன் விபரீதம், ஃபேஸ்புக் சிக்கல் போன்றவற்றை எல்லாம் கடுமையான விமர்சனம் செய்வதாக கதையளக்கிறார்கள்.. வங்கிக்கடனில் இன்ஜினியரிங் மாணவராக இருக்கும் நிவின்பாலி, படிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் சந்தோஷமாக செய்கிறார். அதனால் படிப்பு முடியும்போது மொத்தமே 42 அரியர்ஸ் இருக்கிறது. ஆனாலும் அதைப்பற்றிய கவலை எதுவும் இல்லாமல் பெண்களை சைட் அடிப்பதை சைட்ஜாப்பாக செய்து வருகிறார். தாய், தந்தையுடன் பேசும்போதும் பெண்களை ஓரமாகப் பார்த்து ஜொள்ளுவிடுகிறார்….

Read More