சவால்விடும் குட்டி பிசாசு

சவால்விடும் குட்டி பிசாசு

பாக்காம விட்றாதீங்க – ஆர்பன் வேலியிலே போறதை எடுத்து வேட்டியிலே விட்டுகிட்டு குத்துதே குடையுதேன்னு வருத்தப்படுறது நியாயமான்னு பெருசுங்க பழமொழி சொல்றதைக் கேட்டிருப்பீங்க. இதுக்கு உதாரணம் ஆர்பன். ஒரு திரில்லர் படத்தை திகில் படம் போன்றும் எடுக்கமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அறையை மூடிக்கொண்டு தனியே இந்தப் படத்தைப் பார்த்தால் ரத்தம் கண்ணுக்கு ஏறி, உங்கள் இதயம் துடிப்பதை நீங்களே கேட்கமுடியும். வாருங்கள் ஆர்பன் கதைக்குள் போகலாம். பேய்க் கதைக்கே உரியதான தன்னந்தனி வீட்டில் ஜான் – கேட் தம்பதியர் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு டேனியல் என்ற பையனும் மேக்ஸ் என்ற சின்னப் பொண்ணும் இருக்கிறார்கள். இதில் மேக்ஸ் காது கேட்காத, வாய் பேசமுடியாத சிறுமி. மூன்றாவது குழந்தையை சுமக்கும் கேட்டுக்கு திடீரென அபார்ஷன் நிகழ்ந்துவிடுகிறது. அதனால் மாபெரும் சோகத்தில் மூழ்குகிறாள். குழந்தையை புதைத்த இடத்தில் ரோஜா செடி…

Read More