ரோபோ காதலி – சைபோர்க் கேர்ள்

ரோபோ காதலி – சைபோர்க் கேர்ள்

பாக்காம விட்றாதீங்க – சைபோர்க் கேர்ள்: பொம்பளை மனசுல இருக்கிறதை கடவுளே கண்டுபிடிக்க முடியாது என்பார்கள். பொம்பளை உருவத்தில் இருக்கும் ரோபோவும் அப்படித்தான் என்று சொல்லும் சயன்ஸ்பிக்‌ஷன், ஆக்‌ஷன் கலந்த காதல் படம் சைபோர்க் கேர்ள். காதலின் மகிமையைச் சொல்வதற்கு ஆயிரத்தெட்டு திரைப்படங்கள் வந்துவிட்டன என்றாலும் இந்தக் காதல் கொஞ்சம் புதுசு. நீ உண்மையான காதலில் இருந்தால், இயந்திரம்கூட காதலைப் புரிந்துகொள்ளும் என்பதை இனிக்க இனிக்க சொல்லும் திரைப்படம் சைபோர்க் கேர்ள் திரைக்கதையைப் பார்க்கலாம். நவம்பர் 22, 2007-ம் ஆண்டு 20 வயது இளைஞன் ஜிரோ தன்னுடைய பிறந்த நாளை தனிமையில் கொண்டாடுகிறான். தனக்குத்தானே பிறந்தநாள் பரிசு கொடுத்துக்கொள்கிறான். அப்போது ஒரு பெண்ணை பார்க்கிறான். அழகு என்றால் அத்தனை அழகு. வைத்த கண் வாங்காமல் அவளையே பார்க்கிறான். கடைகளுக்குள் நுழைந்து உடை, செருப்பைத் திருடிக்கொண்டு இவன் இருக்கும் டேபிளில் உட்காருகிறாள்….

Read More