உசுரை உலுக்கும் கருணைக் கொலை

உசுரை உலுக்கும் கருணைக் கொலை

பாக்காம விட்றாதீங்க – மில்லியன் டாலர் பேபி : கருணைக் கொலை செய்வதை ஏற்கவே முடியாதுதான். ஆனால் சில சூழல்… சில மனிதர்கள் விதிவிலக்காக இருக்கலாம் என்பதை அழுத்தமாக சொல்வதுதான் மில்லியன் டாலர் பேபி. நடிகராகவும் இயக்குனராகவும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் ஜொலிஜொலித்த படம். மோ குஷ்லா… மோ குஷ்லா என்று ஒவ்வொரு வெற்றியின் போதும் கூட்டம் பாராட்டு மழை பொழிவதைக் கண்டு பனிக்கட்டியாக கரைகிறாள் மேகி (ஹிலாரி ஸ்வாங்க்) என்ற குத்துச்சண்டை வீராங்கனை. இத்தனைக்கும் அந்த மோ குஷ்லா என்ற வார்த்தையின் அர்த்தம்கூட அவளுக்குத் தெரியாது. அந்தப் பெயரை சூட்டிய பயிற்சியாளர் பிராங்கிக்கு (கிளிண்ட் ஈஸ்ட்வுட்) மட்டுமே தெரிந்த ரகசியம் அது. உலகையே வெல்லத்துடிக்கும் மேகி, ஒரு உணவு விடுதியில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக இருந்தவள். குத்துச்சண்டையின் மீது அலாதி ஆர்வமும் வெறியும் கொண்டவள். எப்படியும் பிராங்கியிடம் பயிற்சி பெற்றுவிடத்…

Read More