67 வயசு தாத்தாவும் அஞ்சு ஆசை நாயகிகளும்

67 வயசு தாத்தாவும் அஞ்சு ஆசை நாயகிகளும்

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு  –  விமர்சனம் எதிர்காலத்தில் உலகப்போர் நடப்பதாக இருந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகளும் வரலாற்று ஆய்வாளர்களும் உறுதியாகச் சொல்கிறார்கள். இதையே தன்னுடைய சாகசபாணியில் அதிரடியாக சொல்லி உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து கல்லா கட்டியிருக்கிறது ‘மேட் மேக்ஸ்’ படத்தின் நான்காம் பாகமான ‘மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு’. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்களிலும் எரிபொருளை மையமாக வைத்துத்தான்  கதையை நகர்த்தியிருந்தார் இயக்குனர் ஜார்ஜ் மில்லர். இப்போது தண்ணீரையும் ஐந்து பெண்களையும் சேர்த்துக்கொண்டு  ரசிகனை கனவுக்கும் எட்டாத தூரத்திற்கு அழைத்துச் செல்கிறார் இயக்குனர். மூன்று வேளை சாப்பாடு, போட்டுக்கொள்ள ஆடை, தங்குவதற்கு வீடு என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லாத எதிர்கால கற்காலத்தில் கதை நடக்கிறது. அந்த உலகத்தின் அத்தியாவசியத் தேவையான தண்ணீரும் எரிபொருளும்  வில்லன் இம்மார்ட்டன் ஜோவின் கைகளில்தான் இருக்கிறது. அதனால் அவன் வைத்ததுதான்…

Read More