டேய் அப்பா லைஃப் இஸ் பியூட்டிஃபுல் பாருடா

டேய் அப்பா லைஃப் இஸ் பியூட்டிஃபுல் பாருடா

அம்மாவின் பாசத்தைச் சொல்வதற்கு உலகெங்கும் ஆயிரத்தெட்டு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பாவுக்கும் மகனுக்குமான உன்னதமான பாசத்தை மெய்சிலிர்க்கச் சொல்வதில் சந்தேகம் இல்லாமல் முதல் இடம், ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ (La vita è bella/Life Is Beautiful) என்ற இத்தாலி மொழிப் படத்துக்குத்தான். கதாநாயகனாக நடித்து இயக்கியிருப்பவர் ராபர்ட் பெனிக்னி. ஜெர்மனியின் நாஜிப்படை  நடத்திய சித்திரவதைக் கூடத்தில் நடக்கும் கொடுமைகளை நகைச்சுவை உணர்வுடன் படமாக்கமுடியும் என்பதையும், அந்த நகைச்சுவை மூலம்  ஆழ்ந்த சோகத்தை விதைக்கமுடியும் என்பதையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டிய படம். சாப்ளின் இயக்கிய, ‘தி கிட்’, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ போன்ற படங்களின் சாயல் ஆங்காங்கே தென்பட்டாலும் இந்தப் படத்தின் நாயகனின் அன்புக்கு இணையாக எந்தக் காதலனையும் சொல்லமுடியாது. வழக்கமான வணிக  சினிமாக்களில் நிகழ்வதுபோல், ஒரு  மோதலில்தான் நாயகி நிகோலாவை சந்திக்கிறான். ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணம் செய்யவேண்டும்…

Read More