சரவணபவன் டயனோசர் – ஜுராசிக் வோர்ல்டு விமர்சனம்

சரவணபவன் டயனோசர் – ஜுராசிக் வோர்ல்டு விமர்சனம்

சரவணபவன் ஓட்டலின் இட்லி, சாம்பார் எப்போதும் ஒரே ருசியில்தான் இருக்கும். ஆனால் அந்த ருசி குறையாது, வயிற்றுக்கும் பிரச்னை செய்யாது என்பதால் நம்பி சாப்பிடலாம். அப்படித்தான் ஜுராசிக் பார்க் தொடங்கி வெளியான மூன்று பாகங்களிலும் டயனோசர்கள் என்னவெல்லாம் செய்யும் என்பது நன்றாகவே தெரியும். நாம் எதிர்பார்த்தபடிதான் இப்போது ரிலீசாகியிருக்கும் நான்காம் பாகமான ஜுராசிக் வோர்ல்டு படமும் இருக்கிறது என்றாலும் தவிர்க்காமல் பார்க்கவேண்டிய படம். ஜுராசிக் பார்க் முதல் பாகத்தில் இருந்து  22வது ஆண்டில் இந்த நான்காம் பாகம் தொடங்குகிறது. ஒரு தீவில் ஜூராசிக் வோர்ல்டு என்ற தீம்பார்க் மிகமிக பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் இருந்து ரசிகர்கள் ஜுராசிக் வோர்ல்டுக்கு வருகைதந்து விதவிதமான டயனோசர்களை பார்த்து ரசிக்கிறார்கள். டயனோசர் மீது ஏறி விளையாடுகிறார்கள். குட்டிக்கரணம் போடும் ரேப்டர் டயனோசர்களில் இருந்து நீருக்குள் மூழ்கியிருக்கும் ராட்சச டயனோசர் வரையிலும் விதவிதமாக இருக்கின்றன….

Read More

டயனோசர் சர்க்கஸ் பார்க்கலாம் வாங்க…

டயனோசர் சர்க்கஸ் பார்க்கலாம் வாங்க…

விதவிதமான டயனோசர்களை வரிசையாக மூன்று படங்களில் ரசிகர்கள் பார்த்து சலித்திருப்பார்கள். அந்த தொழில்நுட்பங்களை குப்பையில் போட்டுவிடாமல், எதிர்காலத்தில் நடப்பதுபோல், ‘ஜுராசிக் வேல்டு’ (Jurassic  World) படத்தை உருவாக்கியிருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். முதல் ஜுராசிக்பார்க் படத்தில் கைவிடப்பட்ட தீவை, இந்தியர் ஒருவர் விலைக்கு வாங்கி அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் தீம்பார்க் உருவாக்கி நடத்துகிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உலகெங்கும் இருந்து மக்கள் வந்து பார்த்து டயனோசர் செய்யும் சர்க்கஸ்களை கண்டு ரசிக்கிறார்கள். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையத் தொடங்குகிறது. மீண்டும் எப்படி ரசிகர்களை கவர்வது என்று ஆராய்ச்சியாளர்கள் மூளையைக் கசக்குகிறார்கள். அதாவது கசக்குவதுபோல் நடிக்கிறார்கள். வழக்கம்போல் அனைத்து வில்லன்களும் செய்வதுபோல் நாலைந்து டயனோசர்களின் சக்திகளை ஒன்றிணைத்து ஒரே டயனோசர் உருவாக்குகிறார்கள். அப்புறமென்ன… அது மனிதர்களை வேட்டையாட…மனிதர்கள் அதனை வேட்டையாட… ஒரே களேபரம். குட்டி சைஸில் இருக்கும் மூன்று புத்திசாலியான…

Read More