ஜெயிக்கப்போவது அனுஷ்கா ஷர்மாவா, சாக்‌ஷியா?

ஜெயிக்கப்போவது அனுஷ்கா ஷர்மாவா, சாக்‌ஷியா?

சபாஷ், சரியான போட்டி. மழை கொடுத்த இடைவேளையில் ஒரு கதகதப்புக்காக தன்னை சந்திக்கவந்த விராட்கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்ததில் நம்ம அனுஷ்கா ஷர்மாவுக்கு எக்கச்சக்க கோபமாம். ஏனென்றால் இதுபோல் டோனி ஏகப்பட்ட தடவை இடைவேளை நேரங்களில் சாக்‌ஷியை சந்தித்துப் பேசியது நடந்திருக்கிறதாம். இப்போது நாடெங்கும் கிரிக்கெட்டில் கோலிக்கு ஆதரவு பெருகிவருவதைப் பொறுக்கமுடியாமல், டோனி சொல்லித்தான் இப்படியொரு எச்சரிக்கையை கிரிக்கெட் வாரியம் விதித்திருக்கிறது என்று நினைக்கிறாராம் அனுஷ்கா ஷர்மா. அதனால் இப்போது அவர் கோபத்தை சாக்‌ஷி மீதுதான் காட்டுகிறார். ‘எப்படியும் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு தகுதி பெற்றுவிடும். சென்னை தகுதி பெறுவது கடினம்தான். ஒருவேளை கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்துவிட்டால், அதனை தோற்கடித்தபிறகு நான் இதுபற்றி உரக்கப்பேசி நியாயம் கேட்பேன்’ என்று நெருக்கமானவர்களிடம் புலம்பிக்கொண்டு இருக்கிறாராம். அதானே… அனுஷ்காவுக்கு ஒரு நியாயம், சாக்‌ஷிக்கு ஒரு நியாயமா? அழகுக்கு ஒரு சோதனை…

Read More