சமந்தாவை இழுத்துவரும் இன்செப்ஷன்

சமந்தாவை இழுத்துவரும்  இன்செப்ஷன்

பார்க்காம விட்றாதீங்க – இன்செப்ஷன்: நம்ம அப்துல்கலாம் விஞ்ஞானி வாழ்க்கைக்கு சலாம் போட்டதும், அடுத்த அஞ்சு வருஷம் ஜனாதிபதி மாளிகையில் மிகவும் சிரமப்பட்டு ஓய்வு எடுத்தார் அல்லவா? அந்த நேரத்தில்தான் அவருக்கு சமூக விழிப்புணர்வு ஏற்பட்டது. பதவியில் இருந்து இறங்கியதும் இந்தியா முழுவதும் சுற்றிவந்து, ‘கனவு காணுங்கள்… கனவு காணுங்கள்’ என்று மாணவர்களிடம் கதறிக்கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் சொன்னதை நம்ம ஆளுங்க யாரும் கண்டுக்கிடலை.  ஆனால் அமெரிக்க சினிமா இயக்குனர்  கிறிஸ்டோபர் நோலன் மிகச்சரியா புரிஞ்சிக்கிட்டார். அப்துல்கலாமின் தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து சிலந்தி வலையாக பின்னப்பட்டதுதான், ‘இன்செப்ஷன்’ திரைப்படம். இந்தப் படம் புரிகிறதோ இல்லையோ யார் கேட்டாலும், ‘அடேங்கப்பா…’ என்ற பாணியில் பாராட்டிவிடுங்கள். இல்லையென்றால் லூஸ் என்று சொல்லிவிடுவார்கள்.  ஏனென்றால் இது மூளையை சிந்திக்கத்தூண்டும் படமாம். கனவு காணும் அனுபவத்தை மாபெரும் கனவு உலகமாக…

Read More