முட்டாள் பேய் – கோத்திகா (Gothika)

முட்டாள் பேய் – கோத்திகா (Gothika)

பாக்கவே பாக்காதீங்க – கோத்திகா: பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார வைத்தியருக்கு பைத்தியம் பிடிச்சா, அவர் எந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற பைத்தியக்கார வைத்தியரிடம் போவார் என்ற விசுவின் குழப்பமான வசனத்தை திரைக்கதையாக நீட்டினால்… அதுதான் கோத்திகா. ராபர்ட் டவ்னி ஜூனியர், ஹாலி பெர்ரி போன்ற சூப்பர் கலைஞர்கள் நடித்தால், அந்தப் படம் உருப்படியாகத்தான் இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. பிள்ளையார் பிடிக்க நினைத்து குரங்கு உருவான கதையாக, திக்கு திசை தெரியாமல் பயணிக்கும் ஒரு  சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகை திரைப்படம் கோத்திகா. நம்பிக்கை தரும் விதமாகத்தான் கோத்திகா ஆரம்பமாகிறது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை பராமரிக்கும் மனநல மருத்துவர் டாக்டர் மிரண்டாவாக வருகிறார் ஹாலி பெர்ரி. அங்கே இருக்கும் நோயாளி குளோயி (Chloe), பூட்டிய அறைக்குள் என்னை ஒருவன் தினமும் கற்பழிக்கிறான் என்று சொல்வதை நம்பமுடியாமல் கணவன் டக்ளஸிடம் சொல்கிறாள்….

Read More