கனவு நிஜமாகும் – கோல் (Goal !)

கனவு நிஜமாகும் – கோல் (Goal !)

ஜஸ்ட் வாட்ச் – கோல்: நம் இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உயிர் என்றால், வெள்ளைக்காரர்களுக்கு ஃபுட்பால். அந்த விளையாட்டை ஸ்டேடியத்திற்குச் சென்று பார்ப்பதை வாழ்க்கை லட்சியமாக நினைப்பவர்கள் உண்டு. ஃபுட்பால் ரசிகர்களை மயக்குவதற்கு எடுக்கப்பட்ட படம் கோல். லட்சியம் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இருந்தால், அதனை நிச்சயம் அடைந்துவிட முடியும் என்பதுதான் படத்தின் ஒற்றை வரிக் கதை. ஒவ்வொரு காட்சியிலும் என்ன நடக்கும் என்பது ஆரம்பம் முதல் முடிவு வரை தெரிகிறது என்றாலும், விளையாட்டு ரசிகர்களை வசீகரிக்கும் மந்திரசக்தி கோல் படத்துக்கு இருக்கிறது. அகதியாக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் தப்பிச்செல்கிறான் சிறுவன் சான்டியாகோ முனிட்ஸ். அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே கையில் அனைவரும் எடுத்துச்செல்லும்போது, தன்னுடன் ஃபுட்பால் எடுத்துக்கொண்டு நகர்கிறான் சான்டியாகோ. ஃபுட்பால் என்றால் அவனுக்கு அத்தனை இஷ்டம். கனவு தேசமான அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இளைஞனாக வளர்கிறான் சான்டியாகோ….

Read More