மீன் வளர்க்காதே, சாப்பிடு

மீன் வளர்க்காதே, சாப்பிடு

பாக்காம விட்றாதீங்க – ஃபைண்டிங் நிமோ விலங்கு, பறவைகளைக் காப்பாற்றுவதற்காக ஏகப்பட்ட சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் மீன்களைக் கண்டுகொள்வதில்லை. தொட்டியில் வைத்து மீன் வளர்ப்பதையே பெரிய சமூக சேவையாக நினைக்கிறார்கள். மீன்களுக்கு சமுத்திரமே போதாது எனும்போது, தொட்டியில் உலவவிட்டு ரசிக்கும் கொடுமைக்குப் பதிலாக சமைத்து  தின்றேவிடலாம். மீன்களின் உலகம் எத்தனை பெரிது என்பதை மனிதனும் சிந்தித்திருக்கிறான். ஆம், ஃபைண்டிங் நிமோ பாருங்கள். பிறக்கும்போதே தாயை விழுங்கிவிட்டான் என்று நம் தமிழ் படங்களில் அவ்வப்போது பேசப்படும் வசனத்திற்கு சரியான உதாரணம் நிமோ. முட்டையில் இருந்த 99 சகோதரர்களையும் அம்மாவையும் ஒரு சுறா விழுங்கிவிடுகிறது. அதனால் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு குட்டி மீனான நிமோவை கண்ணும் கருத்துவமாக வளர்க்கிறார் அப்பா மார்லின். நிமோ பிறவி ஊனம். ஆம், அதன் ஒரு செதில் சிறியதாக இருப்பதால் தந்தை மிகவும்…

Read More