திக்திக் பரிட்சை – Exam

திக்திக் பரிட்சை – Exam

பாக்காம விட்றாதீங்க – எக்ஸாம்: மொத்தம் பத்தே பத்து மனிதர்கள், படம் முழுவதும் ஒரே அறையில்தான் நடக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் திகிலில் கரையவேண்டும் என்று சின்ன வட்டம் போட்டால் ஜெயிப்பது எத்தனை கடினம்? ஆனால் சைக்கோ திரில்லர் வகையைச் சேர்ந்த எக்ஸாம் திரைப்படம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு சிக்ஸர் அடித்திருக்கிறது. வாருங்கள் எக்ஸாம் அறைக்குள் நுழையலாம். ஒரு நிறுவனத்தின் உயர்பதவி தேர்வுக்காக நான்கு ஆண்களும் நான்கு பெண்களுமாக எட்டுப் பேர் வருகிறார்கள்.  ஒவ்வொருவர் முன்பும் ஒரு பேப்பர் வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நுழையும் தேர்வாளர், ‘நீங்கள் இனி கண்ணாடிக்குப் பின்னே கண்காணிக்கப்படுவீர்கள். சரியாக 80 நிமிடங்களில் தேர்வு முடிந்துவிடும். டைம் செட் செய்துகொள்ளுங்கள். செக்யூரிட்டி அல்லது என்னிடம் பேச முயற்சிக்கக்கூடாது. பேப்பரை தவறாக பயன்படுத்தக்கூடாது. ஒரே ஒரு கேள்வி, ஒரே ஒரு பதில். வேறு ஏதாவது…

Read More