சினிமா கிறுக்கு இருக்கா? – Eternal Sunshine of the Spotless Mind

சினிமா கிறுக்கு இருக்கா? – Eternal Sunshine of the Spotless Mind

பாக்கவே பாக்காதீங்க – எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைன்ட்: கிறுகிறுவென தலை சுற்றவைக்கும் நான் லீனியர் திரைக்கதை, மூன்றாவது முறை பார்த்தால் மட்டுமே புரியும் வகையில் நொடியில் மறையும் காட்சியமைப்பு, லேப்டாப் வைத்துக்கொண்டு மூளையை கட்டுப்படுத்துவதாக காதில் பூச்சுற்றும் கதை, ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை போன்ற திகிடுதத்தங்கள் இருந்தாலும் எகிறும் ஐ.எம்.டி.பி. ரேட்டிங்கிறாக ஒரு படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற சினிமா கிறுக்கு உங்களிடம் இருந்தால் மட்டும் எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைன்ட் படத்தைப் பார்க்கலாம். மற்றவர்கள் கதையை மட்டும் படித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். விதவிதமான நகைச்சுவை வேடங்களில் அசத்தும் ஜிம் கேரி காதல் நாயகனாக அவதாரம் எடுக்க… காதலிக்கு இலக்கணமாகத் திகழும் டைட்டானிக் கேட் வின்ஸ்லெட் நாயகியாக வருகிறார். இவர்களுக்கு இடையிலான காதல், மோதல், பிரிதல், சேர்தல், கோபம்,…

Read More