சினிமா வெறியர்கள் கவனத்திற்கு…

சினிமா வெறியர்கள் கவனத்திற்கு…

பாக்காம விட்றாதீங்க – சினிமா பாரடிசோ: இன்றைய இளைய தலைமுறையினருக்கு டெண்ட் கொட்டகை அனுபவம் இருக்காது. தென்னங்கீற்று கூரை, சாக்கு மறைப்புகள், மணலைக் குவித்து உட்காரும் அனுபவம்,  மூன்று இண்டர்வெல், விளக்கு போடும் நேரங்களில் எல்லாம் தியேட்டருக்குள் முறுக்கு, கடலைமிட்டாய் வியாபாரம், ஓப்பன் கழிப்பறை எல்லாமே பெரிசுகளோடு மறைந்துவிடும். அடுத்த தலைமுறையினருக்கு நிச்சயம் இன்றைய மல்டிஃப்ளக்ஸ் சினிமா தியேட்டர் அனுபவங்கள் கிடைப்பதும் சந்தேகமே. ஏனென்றால் அனைத்து தியேட்டர்களும் இழுத்து மூடப்பட்டு மால்களுக்குள் மட்டுமே திறக்கப்படுகின்றன. இந்த சினிமா விஸ்வரூபமெடுத்த ஆரம்ப காலத்தில் எத்தனை பேரை நாயாய் பேயாய் ஆட்டிப்படைத்தது என்பதை இயல்பாகச் சொல்லும் இத்தாலிப் படம்தான் சினிமா பாரடிசோ. இத்தாலியின் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் சால்வெடோர் பின்னோக்கிய பார்வையில் படம் தொடங்குகிறது. அவர் சொந்த கிராமத்தைவிட்டு வெளியேறி 30 வருடங்களாகிவிட்டது. இந்த நிலையில் ஊரில் ஆல்ஃப்ரெடோ இறந்துபோன…

Read More