ம…ரண விளையாட்டு – கேபின் இன் த வுட்ஸ்

ம…ரண விளையாட்டு – கேபின் இன் த வுட்ஸ்

பாக்கவே பாக்காதீங்க – கேபின் இன் த வுட்ஸ் புது வீட்டுக்கு குடி போனால் அல்லது கூட்டமாக பிக்னிக் கிளம்பினால், அது மரணத்தை நோக்கிய பயணம் என்பதுதான் ஆங்கிலப்படத்தின் எழுதப்படாத விதி. என்ன காரணத்திற்காக  சாகிறார்கள் என்ற நோக்கம்தான் மாறுபடுமே தவிர, மற்றபடி எல்லாமே ஒரே கழுதையாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்தப் படத்திலும் கல்லூரித் தோழர்கள் ஐந்து பேர் வார இறுதியை சந்தோஷமாக கழிப்பதற்காக,  ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு மர வீட்டிற்குப் போகிறார்கள். அங்கே போனதும் அவர்களது செயலும் குணமும் மாற்றம் அடைகிறது. மிகவும் புத்திசாலியும் ஒழுக்கமும் நிறைந்த  கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், குடிகாரனாகவும் காதலியின் அடிமையுமாக மாறுகிறான். ஒழுக்கமும் அழகும் நிறைந்த கிரிஸ்டன் கன்னாலியின் மனமும், உடன் வந்த தோழன் மீது அலைபாய்கிறது. இதை எல்லாம் கவனித்து மார்ட்டி எச்சரிக்கை செய்வதை, யாருமே பெரிதாக கண்டுகொள்ளாமல் தங்கள் சந்தோஷமே…

Read More