பாகுபலியிடம் பாடம் படிப்பாரா ஷங்கர்?

பாகுபலியிடம் பாடம் படிப்பாரா ஷங்கர்?

இதுதாண்டா பிரமாண்டம்: திரையிடப்பட்ட மூன்று தினங்களில் டாப் 10 யு.எஸ். பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் பட்டியலில் முதன்முதலாக இடம்பிடித்து 3.5 மில்லியன் டாலர் அள்ளியிருக்கிறது பாகுபலி திரைப்படம். அமெரிக்க மண்ணில் மட்டும் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனையைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பாகுபலி பல்வேறு சாதனைகளையும் முறியடிக்கும் என்றே நம்பப்படுகிறது. இதுவரையிலும் பிரமாண்டம் என்றால் ஷங்கர் என்று நினைத்துக்கொண்டிருந்த அறிவுஜீவுகளுக்கு நிஜமான பிரமாண்டத்தைக் காட்டிவிட்டார் இயக்குனர் ராஜமெளலி. எருமை மாட்டுக்கு பெயிண்ட் அடிப்பது, ஆயிரத்தெட்டு தொப்பையர்களை ஆடவிடுவது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் பூச்செடிகளை கிராஃபிக்ஸ் மூலம் வளர்த்துக்காட்டுவது, ஆங்கிலப்படங்களைக் காப்பியடித்து அதேபாணியில் அச்சுபிசகாமல் சண்டைக் காட்சி அமைப்பது இனியும் செல்லுபடியாகாது என்பதை ஷங்கர் புரிந்துகொள்ள வேண்டும். சிறந்த கதைகளைத் தேர்வு செய்வதிலும், அதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பதிலும் ஷங்கர் கைதேர்ந்தவர் என்றாலும், இந்த பிரமாண்டங்களின் பிடியில் சிக்கித்தான் சின்னாபின்னாமாகி…

Read More

பாகுபலி – விமர்சனம் (Bahubali – Review) டெக்னிக்கல் மிரட்டல்… திரைக்கதை தடங்கல்

பாகுபலி – விமர்சனம் (Bahubali – Review) டெக்னிக்கல் மிரட்டல்… திரைக்கதை தடங்கல்

மொழியைத் தாண்டி ரசிக்கக்கூடியது சினிமா. அதனால்தான் ராஜமெளலி எந்த ஊர்க்காரர் என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தமிழ் ரசிகர்களும் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். மஹாதீரா,  நான் ஈ பட வரிசையில் அகில இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி, முக்கால் கிணறுதான் தாண்டியிருக்கிறது. ஆனாலும் டெக்னிக்கலாக மிரட்டி… ரசிகனை திறந்த வாய் மூடாமல் பார்க்க வைத்திருக்கிறார். இதுவரை கற்பனை கதைகளை மட்டுமே இயக்கிவந்த மெளலி, முதன்முறையாக வரலாற்றுக் கதையைத் தொட்டிருக்கிறார். ஜைன மதத்தின் தொடக்கம் என்பது முழு வரலாறாக பதிவு செய்யப்படாத காற்றுவழிச் செய்தி என்பதால், பாகுபலி வரலாற்றில் தன்னுடைய காதல் கதையை இடைச்செருகலாக நுழைத்து சுவாரஸ்யம் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆரம்பத்திலும் இடம்பெறும் 10 நிமிட காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்துவிடும். அப்படித்தான் அதிரடியாக தொடங்குகிறது படம். அரச வாரிசு பாகுபலியை எதிரிகளிடம்…

Read More