அவெஞ்சர்ஸ் என்ற மிக்சர் பிரியாணி

அவெஞ்சர்ஸ் என்ற மிக்சர் பிரியாணி

ஒவ்வொரு நபருக்கும் ஒரு பிரியாணி மீது ஆசை இருக்கும். சிக்கன், மட்டன், முட்டை, மீன் என்று ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் இவற்றை தனித்தனியாக சாப்பிடாமல், மொத்தமாக கலந்து சாப்பிட்டால் அதுதான் அவெஞ்சர்ஸ் – ஏஜ் ஆஃப் அல்ட்ரான். ஏகப்பட்ட கோடிகளை அள்ளவேண்டும் என்பதற்காகவே ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோர், அயன் மேன், பிளாக் விடோ என்று ஏகப்பட்ட சூப்பர் ஹீரோக்களை ஒன்றுசேர்த்திருக்கிறார்கள். இத்தனை சூப்பர் ஹீரோக்கள் என்றால், எதிர்ப்பதற்கு வலிமையான வில்லன் வேண்டுமே? பூமியைக் காப்பாற்றுவதற்காக இவர்கள் உருவாக்கிய அல்ட்ரான் ரோபோவே இவர்களின் எதிரியாக மாறுகிறது. அதாவது இந்த பிரபஞ்சத்தை மனித இனம் எதிர்காலத்தில் முற்றிலும் அழித்துவிடும் என்று நினைக்கிறது. அதனால் மனித இனத்தை முழுமையாக அழிப்பதற்கான செயலில் இறங்குகிறது. இதற்கு உதவியாக சூப்பர் நேச்சுரல் சக்திகளைக் கொண்ட க்யிக்சில்வர், ஸ்கேர்லெட் என்ற இரட்டையர்களைப் பயன்படுத்திக்கொள்கிறது. தன்னைப் போலவே…

Read More