இசை மழை பொழிகிறது

இசை மழை பொழிகிறது

பாக்காம விட்றாதீங்க – ஆகஸ்ட் ரஷ் இசைக்கு எந்த மொழியும் கிடையாது, வர்க்கபேதமும் தெரியாது. இசை ஞானம் இல்லாதவர்கூட சிம்பொனி இசையை ரசிக்கமுடியும் என்பதற்கு இனிமையான உதாரணம் ஆகஸ்ட் ரஷ். ஒரே ஒரு வரிக் கதையை வைத்துக்கொண்டு, இசை சாம்ராஜ்யமே நடத்தியிருக்கிறார்கள். தேவதையை இதுவரை நேரில் பார்த்திருக்கிறீர்களா? அப்படியில்லை என்றால் ஆகஸ்ட் ரஷ் படத்தில் லைலா கதாபாத்திரமாக வரும் கெர்ரி ரஷ்ஷலை பார்த்து சந்தோஷப்படலாம். இவள் செலோ வாத்தியம் இசைப்பவளாக இருக்கிறாள். ஆள் உயரத்துக்கு இருக்கும் வயிலினைத்தான் செலோ என்கிறார்கள். கிடார் இசைக் கலைஞனாகவும் பாடகனாகவும் இருக்கிறான் லூயிஸ். இசை நிகழ்ச்சி முடிந்த ஓர் பெளர்ணமி இரவில் மொட்டை மாடியின் உச்சியில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் மீது அமர்ந்து ரோட்டோர இசையை ரசிக்கிறான் லூயிஸ். அப்போது மாடிக்கு வருகிறாள் லைலா. இசையை ரசிப்பதற்காக அவளையும் மேலே வரச்சொல்கிறான். ஒரே…

Read More