கஞ்சா புகைக்கும் கிறிஸ்டன் ஸ்டுவர்ட்

கஞ்சா புகைக்கும் கிறிஸ்டன் ஸ்டுவர்ட்

இயக்குனர் பாலா இயக்கிய, ‘பிதாமகன்’ படத்தில் அறிமுகமான கஞ்சா கருப்பு ஒரு பேட்டியில், ‘நான் உண்மையில் கஞ்சாவை சுவைத்ததே இல்லை. அது கருப்பா, வெள்ளையா என்பதும் தெரியாது. கேரக்டருக்காக கஞ்சா பார்ட்டி போல் நடித்தேன்’ என்று சத்தியம் செய்திருந்தார். இதையே உல்டாவாக சொல்கிறார் அமெரிக்க நடிகை கிறிஸ்டன் ஸ்டுவர்ட். கிறிஸ்டனுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தொடர்ச்சியாக ‘ட்விலைட்’ படங்களில் நடித்து ஹாலிவுட் நட்சத்திரப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பவர். இப்போது அவர் நடித்துவரும், ‘அமெரிக்கன் அல்ட்ரா’ படத்துக்காக தினமும் எக்கச்சக்கமாக கஞ்சா புகைக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. கதைப்படி அவர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரப் பறவை. எந்த நேரமும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக கஞ்சா புகைப்பதற்கு அடிமை ஆகிறார். கஞ்சா போதை அவரை கனவுலகிற்கு இழுத்துச் செல்வதுடன், எப்போதும் சந்தோஷ மனநிலையிலும் வைத்திருக்கிறது….

Read More