அழுக்கான அமெரிக்கா – அமெரிக்கன் பியூட்டி

அழுக்கான அமெரிக்கா – அமெரிக்கன் பியூட்டி

பாக்காம விட்றாதீங்க – அமெரிக்கன் பியூட்டி: பாரதிராஜா உயிர்ப்போடு இருந்த காலத்தில் சிவாஜி கணேசன், ராதாவின் பெருந்திணை காதலை முன்வைத்து, ‘முதல் மரியாதை’ என்ற அற்புதமான காதல் காவியத்தை உருவாக்கியிருப்பார். நல்ல சினிமா என்றாலும், உண்மைக்குப் பக்கத்தில் இராமல் நாடகத்தன்மை மேலோங்கி இருக்கும். நிஜமான ஒரு நடுத்தர வயது மனிதனின் காதல் உணர்வுகளை  அப்பட்டமாக சொன்னவகையில், ‘அமெரிக்கன் பியூட்டி’ படம் அசைக்கமுடியாத உயரத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடுகிறது, அங்கே மக்கள் சந்தோஷமாகவும் ஆனந்தமாகவும் வாழ்கிறார்கள் என்ற எண்ணத்துடன் கனவு காணும் அத்தனை மனிதர்களும் பார்க்கவேண்டிய  படம் இது. நாற்பதைக் கடந்துவிட்ட லெஸ்டர் (கெவின் ஸ்பேசி) நெருக்கடிதரும் வேலையை விடுகிறான். அடிக்கடி கணவன் இப்படி செய்வதால், பணம் சம்பாதிப்பதில் அதிக நாட்டமுடன் இருக்கும் அவனது மனைவி கோபமாகிறாள்.  இருவருக்கும் உறவு சீர்குலைந்து சண்டை நடக்கிறது. இவர்கள்…

Read More