எனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்

எனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்

கடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி…  ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார் நைட் ஷியாமளன். படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே பரபரப்பு பற்றிக்கொள்கிறது. அழகான மூன்று இளம் பெண்களை கடத்திப்போய் சிறை வைக்கிறான் ஜேம்ஸ் மெக்வாய். உங்கள் மூவரையும் உணவாக்கப் போகிறேன் என்கிறான் ஜேம்ஸ்.  நாய் அல்லது முதலைக்கு  உணவாக்கப்போகிறான் என்று நினைத்து மூன்று இளம்பெண்களும் நடுங்குகிறார்கள். திடீரென பெண்ணாகவும், சிறுவனாகவும் மாறி ஜேம்ஸ் பேசுவதைக் கண்டு மற்றவர்கள் குழப்பம் அடைந்தாலும், அன்யா டெய்லர் மட்டும்,  அவன் ஸ்பில்ட் பெர்சனாலிட்டி பிரச்னையில் சிக்கியிருப்பதை புரிந்துகொள்கிறாள்.  இரண்டு பெண்கள் தப்பிப்பதாக நினைத்து எசகுபிசகாக ஜேம்ஸிடம் மாட்டிக்கொண்டு தனியறையில் அடைக்கப்படுகிறார்கள். டென்னிஸாக பெண்களை கடத்திவந்த ஜேம்ஸ், பேரியாக இருக்கும்போது மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கிறான். இவனுக்குள் ஏராளமான நபர்கள் ஒளிந்திருப்பதை…

Read More