பாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)

பாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)

ஜெனிபர் லாரன்ஸ், கிறிஸ் பிராட் போன்ற அதிபிரபலங்கள் நடித்திருந்தாலும், திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை என்றால் தேறவே தேறாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாசஞ்சர்ஸ். 5,000 பயணிகளுடன் அவலோன் எனப்படும் விண்வெளி கப்பல் ஹோம்ஸ்டெட் 2 என்ற கிரகத்தை நோக்கி பயணமாகிறது. அந்த கிரகத்தை சென்றடைவதற்கு 120 ஆண்டுகள் ஆகும் என்பதால், அனைவரும் தூக்கநிலையில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள். தற்செயலாக விண்வெளி கப்பல் மீது மிகப்பெரிய வின்பாறை மோதிய விபத்தில் மின்சார பழுது ஏற்பட்டு நாயகன் ஜிம் பிரஸ்டனுக்கு (கிறிஸ் பிராட்) மட்டும்  விழிப்பு வருகிறது. விண்வெளி களத்தில் அத்தனை பேரும் தூங்கிக்கொண்டிருக்க தன்னந்தனியே விழித்துக்கொண்டு இருக்கிறான் ஜிம். அவனுக்கு துணையாக இயந்திர மனிதன் ஆர்தர் மட்டுமே இருக்கிறான். இன்னும் 90 ஆண்டுகள் கழித்துத்தான் அத்தனை பேரும் விழிப்பார்கள், அதற்குள் தான் செத்துப்போய்விடுவோம் என்ற எண்ணத்தில் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிறான்….

Read More