பாக்காம விட்றாதீங்க – காந்தி – அஹிம்சையின் தரிசனம் (Gandhi Movie Review)

பாக்காம விட்றாதீங்க – காந்தி – அஹிம்சையின் தரிசனம் (Gandhi Movie Review)

ரூபாய் நோட்டுகளில் மட்டுமே மகாத்மா காந்தியை பார்த்திருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு நிஜமான காந்தியை அறிமுகப்படுத்திய பெருமை ரிச்சர்டு அட்டன்பரோவுக்கு உண்டு. இந்தியர்களை அடக்கியாண்ட வெள்ளையர்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர்தான் தேசத்தந்தை காந்தியை பற்றி திரைப்படம் எடுத்தார் என்பதை வேதனையுடன் அல்லது பெருமையுடன் பதிவு செய்யலாம். ஆயிரம் புத்தகங்கள் கொடுக்காத விழிப்புணர்வை ஒரு திரைப்படம் கொடுத்துவிட முடியும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் காந்தி. ஒரு பரதேசி போன்று தோற்றமளிக்கும் ஒரு நபரை பற்றி படமெடுப்பதற்கு எப்படி பணம் கொடுக்கமுடியும் என்று பெரிய சினிமா நிறுவனங்கள் எல்லாம் கைவிரித்தபோதும், தன்னுடைய சேகரிப்புகளையும் அரிய கலை பொக்கிஷங்களையும் விற்பனை செய்து சொந்தமாக இந்த படத்தை தயாரித்தார் அட்டன்பரோ. ஆங்கிலேயராக இருந்தாலும் காந்தியை மிகச்சரியாக காட்டியதற்காக அட்டன்பரோவுக்கு ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டிருக்கிறான். தேசத் தந்தை காந்தி பிரார்த்தனை கூடத்திற்கு வேகவேகமாக செல்லும்போது கோட்சேவால்…

Read More

பாக்காம விட்றாதீங்க – ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டாரின் என்டர் த டிராகன் (Enter the Dragon)

பாக்காம விட்றாதீங்க – ஆக்‌ஷன் சூப்பர் ஸ்டாரின்  என்டர் த டிராகன் (Enter the Dragon)

தற்காப்புக்கலையின் உச்சத்தை தொட்டவரான புரூஸ் லீ, தத்துவம் முதுகலை படித்தவர் என்பதும் ஆழ்ந்த தத்துவ ஞானம் உடையவர் என்பதும் பலருக்கு தெரியாது. கராத்தே கலையை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்த்த லீ, குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி தொடர்களிலும் பல படங்களிலும் நடித்திருக்கிறார். சண்டைக்கு புரூஸ் லீ கொடுத்திருக்கும் விளக்கம் அதியற்புதமானது. களத்தில் எதிரி இருக்கக்கூடாது ஆனால் சண்டை நடக்கவேண்டும். ஒரு சீரியஸ் நாடகம் போன்று சண்டை அமையவேண்டும். போட்டி களத்தில் யார் வேண்டுமானாலும் எதிரியாக வரலாம், எப்படியாயினும் தாக்கலாம் என்பதால் அங்கு வேறு சிந்தனையோ, கனவோ இருக்கக்கூடாது. சண்டை குறித்த டென்ஷன் இல்லாமல் சண்டைக்கு தயாராக இருக்கவேண்டும். எதிரி தடுக்கும்போது தாக்கவும், எதிரி தாக்கும்போது தடுக்கவும் வேண்டும். சண்டை இல்லாத சண்டைதான் என் கனவு என்று சொன்னார் புரூஸ் லீ. இளவயதில் மரணம் அடைந்த காரணத்தால் சில…

Read More

பாக்காம விட்றாதீங்க – சினிமா மேதையின் மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

பாக்காம விட்றாதீங்க – சினிமா மேதையின் மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

சார்லி சாப்ளின் இல்லாத சினிமா உலகத்தை யாருமே நினைத்துப் பார்க்கமுடியாது. உலகின் முதல் சூப்பர்ஸ்டார். நகைச்சுவை சிந்தனாவாதி. உலகை குலுக்கிய கலகக்காரர். சினிமா கலையின் உச்சத்தைத் தொட்டவர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். மவுன படங்களின் காலத்தில் இருந்து பேசும் படம் வரையிலும் வெற்றியை சுவைத்தவர். சாப்ளின் கைவண்ணத்தில் வெளியான ஒவ்வொரு படமும் தனித்தன்மை வாய்ந்தது என்றாலும், படங்கள் பேசத்தொடங்கிய பிறகும் பிடிவாதமாக மவுன படமாக இயக்கி மாபெரும் வெற்றி அடைந்த மாடர்ன் டைம்ஸ் படத்தை அதிஉன்னது என்ற பட்டியலில் சேர்க்கலாம். உழைப்பாளர்களுக்கு ஆதரவாகவும் முதலாளிவர்க்கத்திற்கு சம்மட்டியடியாகவும் வெளியான படம் இது.. பொருளாதார மந்தத்தால் 1930களில் வேலையும், சம்பளமும் கிடைக்காமல் மக்கள் அல்லாடுகிறார்கள். அதனால் எவ்வளவு வேலை கொடுத்தாலும் செய்வதற்கு தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொழிற்சாலையில் நட்டுகளை முடுக்கும் வேலை செய்கிறார் சார்லியாக வரும் சாப்ளின். மனிதர்கள்…

Read More

பாக்காம விட்றாதீங்க – த பியானிஸ்ட் (The Pianist)

பாக்காம விட்றாதீங்க –   த பியானிஸ்ட் (The Pianist)

இனப்படுகொலை உலகெங்கும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த இனப்படுகொலைகளின் உச்சம் என்றால் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த யூத படுகொலையைத்தான் சொல்லவேண்டும். இந்த படுகொலையை வரலாற்றில் ஹோலோகாஸ்ட் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஹிட்லரின் நாஜி படையினர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்றொழித்த சம்பவங்களையொட்டி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இசைக்கலைஞன் பார்வையில் படுகொலையை காட்டியிருக்கும் தி பியானிஸ்ட் படத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்தப் படத்தை இயக்கிய ரோமன் பொலான்ஸ்கியும் யூதர் என்றாலும், பாரபட்சமில்லாமல் உண்மையின் பக்கத்தில் இருந்து காட்டியதாக பாராட்டப்படுபவர். போலந்து நாட்டை சேர்ந்த லாட்ஸ்லா ஸ்பில்மென் இசை தவிர குறிப்பாக பியானோ தவிர வேறொன்றும் அறியாதவன். சிறந்த இசைக்கலைஞன் என்பதால் நல்ல அங்கீகாரத்துடன் மேல்மட்ட வசதியான வாழ்க்கை வாழ்கிறான். நண்பர்கள், குடும்பம் என்று சந்தோஷமாக வாழ்க்கை நகர்கிறது. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டு இருந்தாலும் அதுபற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தானுண்டு…

Read More

பாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)

பாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)

ஜெனிபர் லாரன்ஸ், கிறிஸ் பிராட் போன்ற அதிபிரபலங்கள் நடித்திருந்தாலும், திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை என்றால் தேறவே தேறாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாசஞ்சர்ஸ். 5,000 பயணிகளுடன் அவலோன் எனப்படும் விண்வெளி கப்பல் ஹோம்ஸ்டெட் 2 என்ற கிரகத்தை நோக்கி பயணமாகிறது. அந்த கிரகத்தை சென்றடைவதற்கு 120 ஆண்டுகள் ஆகும் என்பதால், அனைவரும் தூக்கநிலையில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள். தற்செயலாக விண்வெளி கப்பல் மீது மிகப்பெரிய வின்பாறை மோதிய விபத்தில் மின்சார பழுது ஏற்பட்டு நாயகன் ஜிம் பிரஸ்டனுக்கு (கிறிஸ் பிராட்) மட்டும்  விழிப்பு வருகிறது. விண்வெளி களத்தில் அத்தனை பேரும் தூங்கிக்கொண்டிருக்க தன்னந்தனியே விழித்துக்கொண்டு இருக்கிறான் ஜிம். அவனுக்கு துணையாக இயந்திர மனிதன் ஆர்தர் மட்டுமே இருக்கிறான். இன்னும் 90 ஆண்டுகள் கழித்துத்தான் அத்தனை பேரும் விழிப்பார்கள், அதற்குள் தான் செத்துப்போய்விடுவோம் என்ற எண்ணத்தில் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிறான்….

Read More

குட்டீஸ்களுக்காக சங்குசக்கரம்

குட்டீஸ்களுக்காக சங்குசக்கரம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக சங்குசக்கரம் படத்தை பிரமாண்டமாக தயாரித்துவருகிறார் கே.சதீஷ். K Sathish (@sathishoffl) புதுமுக இயக்குனர் மாரிசன் இயக்கத்தில் ஃபேன்டஸி படமாக தயாராகும் சங்குசக்கரம் வரும் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு குதூகலம் தருவதற்காக வருகிறது. இந்தப் படம் குறித்து பேசினார் கே.சதீஷ். மை டியர் குட்டிச்சாத்தான், அஞ்சலி போன்ற ஒரு சில படங்களே குழந்தைகளை மகிழ்வித்தன. அந்த வகையில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்து மட்டுமின்றி மாய உலகையும் காட்டி மகிழ்விக்க வருறது சங்கு சக்கரம். அது மட்டுமின்றி படம் முழுக்க நகைச்சுவை கொட்டிக்கிடக்கும் இந்தப் படத்தின் முக்கியமான வேடத்தில் திலிப் சுப்பராயன் நடிக்கிறார். பசங்க படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கீதா, நிசிகேஷ் ஆகியோர் கதையை கொண்டுசெல்ல, ஷபீர் இசை அமைக்கிறார். இந்தப்படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டது என்றாலும் பெரியவர்களும்…

Read More