தமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்

தமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016  அவார்ட்ஸ்

இந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம் என்றுதான் சொல்லவேண்டும். படம் குப்பையாக இருந்தாலும் முதல் வாரத்திலேயே நிறைய படங்கள் வசூல் அள்ளிவிட்டன. ஆண்டு இறுதியில் வந்த அமீர்கானின் டங்கல் ஏராளமான விருதுகளை அள்ளியிருக்கிறது. ஹிரித்திக் ரோஷன் நடித்த மொகஞ்சதாரோ கேவலமான பட லிஸ்டில் சேர்ந்திருக்கிறது. இனியாவது அப்படிப்பட்ட முயற்சியில் அவர் இறங்காமல் இருந்தால் சரிதான். இதோ தமிழ் ஹாலிவுட் வழங்கும் ஹிந்தி சினிமா 2016ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் இதோ… வெற்றிபெற்ற அனைவருக்கும் தமிழ் ஹாலிவுட் புத்தாண்டு வாழ்த்துகள்… ஹிந்தி சினிமா 2016ம் சினிமா விருதுகள் சிறந்த படம் : Dangal சிறந்த நடிகர் : Aamir Khan ( Dangal) சிறந்த நடிகை : Alia Bhatt (Dear Zindagi,  Udta Punjab) சிறந்த இயக்குனர் : Nitesh Tiwari (Dangal)…

Read More

கலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்

கலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்

இந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். அப்படியொரு அனுபவத்தை மீண்டும் கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. கதைக்காக ரொம்பவும் மெனக்கெடாமல் வசனங்களாலும், கதாபாத்திரங்களாலும் கதையை நகர்த்தி ஜாலியான ஒரு மேட்ச் பார்த்த திருப்தியை கொடுத்துவிட்டார் என்பது மட்டும் உண்மை. முதல் பாகத்தில் வந்தவர்களில் பெரும்பாலோ, கிரிகெட்டை மறந்து குடும்பம், குட்டி என்று செட்டிலாகி இருக்கிறார்கள் என்பதை நீட்டிமுழக்கி சொல்வதாக, படம் ஆரம்பமாகிறது. அத்தனை பேரும் ஓன்றுசேர்ந்து ஜெய் கல்யாணத்துக்காக தேனி போனதும் கதை சூடு பிடிக்கிறது. திடீரென தேனியில் சந்திக்கும் பழைய நண்பன் அரவிந்திற்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டையே மறந்தவர்கள் அரையிறுதியில் அடித்து நொறுக்கிறார்கள். அதனால் கடுப்பாகும் ஊர் டீம் கேப்டன் வைபவ், சென்னை டீமை வெல்வதற்கு மறைமுகமாக திட்டம் போடுகிறான். சொப்பனசுந்தரியை வைத்து டீம் ஆட்களை மயக்கி போட்டோ எடுத்துவிடுகிறான்….

Read More

தற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)

தற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)

எந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை மாபெரும் தியாகம், மாவீரம் என்று சொல்வதால், சுசீந்திரன் சொல்லவந்த கருத்து அத்தனையும் அடிபட்டு போகிறது. அழுத்தம் திருத்தமாக சாதி பிரச்னையை பேசவேண்டும் என்பதற்காக 1987க்கு போயிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இன்றும் சாதிப் பிரச்னை உச்சத்தில் இருக்கும்போது, எதற்காக மெனக்கெட்டு அந்தக் காலகட்டத்தை தேர்வு செய்தார் என்பதுதான் ஆச்சர்யம். சாதி பிரச்னை எல்லாம் அந்தக் காலகட்டத்தில் மட்டும்தான் இருந்ததோ, இப்போது இல்லையோ என்ற மாய தோற்றத்தை இன்றைய நகரத்து இளசுகள் மத்தியில் விதைக்கும் அபாயம்  இந்தப் படத்தில் இருக்கிறது. உயர் சாதி மக்கள் வசிக்கும் பாதையில் கீழ் சாதி பிணம் போகக்கூடாது என்ற பிரச்னையுடன் படம் ஆரம்பமாகிறது. நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், பிணம் மட்டுமே அந்த வழியில் போகும் நிலை ஏற்படுகிறது. இந்த நேரத்தில்தான் மாநிலத்திலேயே…

Read More