கவர்ச்சி நடிகையின் மகன் –   பாவாட விமர்சனம் – 36 மார்க் – Paavada (Malayalam Movie)

கவர்ச்சி நடிகையின் மகன் –   பாவாட விமர்சனம் – 36 மார்க் – Paavada (Malayalam Movie)

பெற்ற தாயை கவர்ச்சி நடிகையாக பார்க்கும் மகனின் அவலத்தை சித்தரிக்கும் வகையில் பாவாட புத்தம்புது முயற்சி. ஆனால் காட்சிக்குக் காட்சி திரைக்கு வெளியேயும்  நாத்தமடிக்கும் அளவுக்கு குடிப்பதும்,  ஜவ்வு மிட்டாய் மாதிரி  தேவையில்லாமல காட்சிகளை திணித்திருப்பதும் பொறுமையை சோதிக்கின்றன. குடிப்பதற்காக தலையைக்கூட அடகுவைக்கும் அளவுக்கு மொடா குடியன் ஜாய். சில்லறை வேலைகளை செய்து சம்பாதிக்கும் பணத்தை இரண்டு விஷயத்துக்காக மட்டும்தான் செலவழிக்கிறான். ஒன்று குடி. அடுத்ததும் குடி. இப்படிப்பட்ட சூழலில் நர்ஸாக இருக்கும் சினிமோல் மீது காதல் வசப்படுகிறான். சினிமா இலக்கணப்படி குடிகாரனாக இருந்தாலும்,  காதல் சீக்கிரமாக கனிந்து கல்யாணத்தில் முடிகிறது. ஜாய் பாத்திரத்திற்கு பிரித்விராஜும், சினிமோலுக்கு மியா ஜார்ஜும் கனகச்சிதமாக பொருந்துகிறார்கள். குடிகாரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல், கடவுளிடம் தனியே பேசும் மியாவிற்கு, யாருடனோ கள்ளத்தொடர்பு என்று சந்தேகப்படுகிறான் ஜாய். தன்னை கணவர் சந்தேகப்பட்டு திருட்டுத்தனமாக வேவு பார்ப்பது…

Read More