கிக் இல்லாத பெக் – தெறி விமர்சனம் 38 மார்க் (Theri Review)

கிக் இல்லாத பெக் – தெறி விமர்சனம் 38 மார்க் (Theri Review)

ஜஸ்ட் வாட்ச் – தெறி: ஏசி பார், விதவிதமான சைடீஸ், காஸ்ட்லி சரக்கு, கம்பெனிக்கு நாலு ஃப்ர்ண்ட்ஸ் – இத்தனை இருந்தும் அடிக்க அடிக்க போதையே ஏறலைன்னா எப்படியிருக்கும் – தெறி படம் மாதிரி இருக்கும். அதிரடிக்கு விஜய், நைனிகா, கிளுகிளுப்புக்கு சமந்தா, எமி ஜாக்சன், சென்டிமென்ட்டுக்கு ராதிகா, பிரபு, அசத்தலுக்கு ஜி.வி.பிரகாஷ் என எத்தனையோ இருந்தும் கதையும் திரைக்கதையும் தொங்குதேப்பா… கொஞ்சம் சத்ரியன், கொஞ்சம் பாட்ஷா, கொஞ்சம் மதுர என மூன்று படங்களிலும் இம்ப்ரஸ்(?) ஆகி மூன்று விஜய்க்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். சினிமா இலக்கணப்படி அம்மா இல்லாத நைனிகாவை (நடிகை மீனாவின் மகள்) கண்ணுக்குள் வைத்து வளர்க்கிறார் ஜோசப் (விஜய்). பொண்டாட்டி இல்லாமல் ஒரு வாலிபன் இந்த உலகத்தில் தனியே இருக்க முடியுமா என்ன? நைனிகா படிக்கும் ஸ்கூலில் டீச்சராக இருக்கும் ஏமி ஜாக்சன், விஜயை…

Read More