கொலையும் செய்வான் தோழன் – மிஸ்டிக் ரிவர் (Mystic River)

கொலையும் செய்வான் தோழன் – மிஸ்டிக் ரிவர் (Mystic River)

பாக்கவே பாக்காதீங்க – மிஸ்டிக் ரிவர்: பிரமாதமான நடிகர், வித்தியாசமான இயக்குனர், அற்புதமான தயாரிப்பாளர், சிறந்த இசையமைப்பாளர் என்றெல்லாம் பெயர்வாங்கிய கிளின்ட் ஈஸ்ட்வுட், பட்டியலில் ஒரு கருப்புப்புள்ளி இந்த மிஸ்டிக் ரிவர் என்று சொல்லலாம். இயல்பான கதையோட்டம், நிஜமான காட்சியமைப்பு, அற்புதமான நடிப்பு என்று மிஸ்டிக் ரிவருக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்திருந்தாலும், ஆஸ்கர் விருதுகளை இந்தப் படம் அள்ளியிருந்தாலும்.. நெஞ்சைத் தொடும் காட்சிகள் இல்லாத காரணத்தால் பார்க்கத் தேவையில்லாத பட பட்டியலில் சேர்கிறது மிஸ்டிக் ரிவர். சின்ன வயது  தோழர்கள், வளர்ந்தபிறகு எதிரிகளாக மாறுவதுதான் ஒரு வரி கதை. ஜிம்மி, ஷேன், டேவ் ஆகிய மூன்று சிறுவர்கள் தெருவில் விளையாடுகிறார்கள். அப்போது காரில் வரும் ஒருவன், டேவ்வை மிரட்டி காரில் ஏற்றி கொண்டுபோகிறான். போலீஸ் பிடித்துச்செல்கிறது என்று சிறுவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. வக்கிரகுணம் படைத்தவன் டேவ்வை…

Read More