சொர்க்கம் அல்ல நரகம் – எலிசியம் (Elysium)

சொர்க்கம் அல்ல நரகம் – எலிசியம் (Elysium)

பாக்கவே பாக்காதீங்க – எலிசியம்: மரணத்துக்குப் பிறகு நல்ல மனிதர்கள் அனைவரும் வாழும் இடமாக கிரேக்க இதிகாசங்களில் குறிப்பிடப்படுவதுதான் எலிசியம். திகட்டத்திகட்ட இன்பம் மட்டுமே ஆட்சிபுரியும் எலிசியத்தில் நோய்க்கும் துன்பத்திற்கும் இடம் இல்லை. நிஜமாகவே இப்படி ஒரு இடம் இருந்தால் எப்படியிருக்கும் என்ற ஒரு வரி கதையை இரண்டு மணி நேரத்துக்கு நீட்டி முழக்கினால், அதுதான் எலிசியம் என்ற அறிவியல் புனைவு திரைப்படம். வித்தியாசமான திருப்பங்கள் எதுவும் இல்லாமல் சவசவவென நகர்வதால் எலிசியம் பார்க்கத்தேவையில்லாத பட்டியலில் சேர்கிறது. இனி கதை. நம்மூரில் படித்தவர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்குப் போய் ராஜபோக வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்படுவதைப் போல, 2154-ம் ஆண்டு வசிக்கும் மக்கள் எலிசியம் போகவேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார்கள். எலிசியம் என்பது பூமிக்கு வெளியே பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை விண்வெளி நிலையம். அங்கே பணக்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எல்லோரும்…

Read More