வர்றாண்டா டெட்பூல் – Deadpool Trailer

வர்றாண்டா டெட்பூல் – Deadpool Trailer

டிரெய்லர் டயம்: கேன்சரில் சாகப்போகும் வில்சனுக்கு விசித்திர சோதனை செய்வதற்கு முடிவெடுக்கிறார்கள். அந்த சோதனை செய்தால் கேன்சர் குணமடைய வாய்ப்பு இருக்கிறது என்று ஏமாற்றி சம்மதம் வாங்குகிறார்கள். வழக்கம்போல் அந்த சோதனை ஏடாகூடமாக மாறிவிட, வில்சனின் தோல் முழுவதும் புண்ணாகிவிடுகிறது. ஆனால் உடலின் உள் உறுப்புகள் அத்தனையும் பலம் பெற்றுவிடுகின்றன. சுருக்கமாக சொல்வது என்றால் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் போன்று வில்சனும் டெட்பூல் எனப்படும் சூப்பர் ஹீரோவாக மாறிவிடுகிறான். ஆனால் வில்சனின் மனம் அவ்வப்போது அலைபாயக்கூடியது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழி வாங்கத் துடிக்கிறான். அவர்கள் தமிழ் சினிமா இலக்கணப்படி  வில்சனின் காதலியை கடத்தி பிளாக்மெயில் செய்கிறார்கள். அவர்களீடம் இருந்து காதலியை காப்பாற்றி, நாட்டுக்கும் எப்படி நல்ல செய்யப்போகிறான் என்பதை நகைச்சுவை ததும்ப சொல்லவரும் ஆக்‌ஷன் படம் டெட்பூல். இந்தப் படத்தில் ஏகப்பட்ட ரத்தமும் முத்தமும் இருப்பதால்…

Read More

ஜெனிஃபர் லாரன்ஸ் பராக் பராக்

ஜெனிஃபர் லாரன்ஸ் பராக் பராக்

Hunger Games Mockingjay – Part II  Trailer அழுத்தமான கதையமைப்பு, அதிரடிக் காட்சிகள், எதிர்பாராத திருப்பங்கள் என்று ஹங்கர் கேம்ஸ் பெயரில் தொடர்ந்து வெளியான படங்களை ரசிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், எல்லாவற்றையும்விட முக்கியமான முதல் காரணம் நாயகி  ஜெனிஃபர் லாரன்ஸ்தான். அவரது அதிரடியில் Hunger Games Mockingjay – Part II – ஹங்கர் கேம்ஸ் படங்களின் கடைசி பாகமாக வெளிவருகிறது. முதல் பாகமான ஹங்கர் கேம்ஸ் பார்க்காத துரதிர்ஷ்டசாலிகள் இந்த லிங்கில் அழகு தேவதை பக்கத்தை மட்டுமாவது படித்துவிட்டு இந்த டிரைலரைப் பார்த்தால் ஜெனிஃபர் லாரன்ஸ்  உடல் மொழியின் வலிமையை அறிந்துகொள்ளலாம். ஏன் அவருக்காக உலகெங்கும் ரசிகர்கள் அடித்துக்கொள்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளலாம். பஞ்சத்தில் வாழும் 12 பிரதேசங்களை  அடக்கியாளும் அராஜக ஆட்சிக்கு எதிராக ஒற்றை மனுஷியாக குரல் கொடுக்கிறாள் ஜெனிஃபர். அவளை ஒழித்துக்கட்டுவதற்காக அராஜகத் தலைமை எடுத்த…

Read More

கமல் பாணியில் அர்னால்டு

கமல் பாணியில் அர்னால்டு

மிரட்ட வருகிறது – டெர்மினேட்டர் ஜெனிசிஸ்: கமலஹாசனிடம் ஒரு நல்ல குணம் உண்டு. புதுப் படத்தில் நல்லபடியாக நாலைந்து கேரக்டர் இருப்பதாகத் தெரிந்தால்… அத்தனை கேரக்டருக்கும் தனித்தனியாக ஆட்களைத் தேடி தயாரிப்பாளர் சிரமப்பட வேண்டாம் என்று நினைத்து, தானே அத்தனை கேரக்டர்களிலும் நடித்துவிடுவார். சென்னைக்கு ‘ஐ’ படவிழாவுக்கு வந்து அவமானப்பட்ட அர்னால்டு, ’உலக நாயகன்’ தந்திரத்தை எப்படியோ தெரிந்துகொண்டு திரும்பியிருக்கிறார். அதனால் அவரதுஅடுத்த படமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ்  கமலஹாசனின்  ராஜதந்திரத்தை அமல் படுத்திவிட்டார். ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான டெர்மினேட்டர் முதல் பாகத்தில் வில்லனாக வருவார் அர்னால்டு. அந்தப் படம்தான் அவரை உச்சத்துக்கு கொண்டுபோனது. அதன்பிறகு நாயகனாகி, நல்லவராகவும் மாறிவிட்டார். அதனால் அடுத்தடுத்து வெளியான நான்கு பாகங்களிலும் நாயகனாக நடித்தார். இப்போது  ஐந்தாவது பாகம் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் நாயகனாக வரும் அர்னால்டு வில்லனை பந்தாட…

Read More

உஷாரய்யா உஷார் – Point Break சூரர்கள் கமிங்

உஷாரய்யா உஷார் – Point Break  சூரர்கள் கமிங்

இறக்கை போன்று ஆடையை பிரத்யேகமாக வடிவமைத்துக்கொண்டு பறக்கும் ஒருவன், சர்ஃபிங்  கில்லாடி ஒருவன், எப்பேர்ப்பட்ட மலைகளிலும் ஏறிவிடும் அசகாய சூரன் ஒருவன், மோட்டார் சைக்கிள் ரேஸ் வீரன் ஆகிய நால்வரும் சேர்ந்து உலகப்  பொருளாதாரத்தை அசைத்துப்பார்க்க முடிவு எடுக்கிறார்கள். தங்களால் இதனை  செய்யமுடியும் என்பதைக் காட்டுவதற்காக வங்கிகளுக்கு விமானத்தில் கொண்டுசெல்லப்படும் இரண்டு கண்டெய்னர் பணத்தை, வானில் இருந்து கீழே கொட்டுகிறார்கள். ஒரு கிராமம் முழுவதும் பண மழை பொழிகிறது. இந்தக் கில்லாடிகளின் கொட்டத்தை முறியடிக்க வருகிறான் அதிரடி நாயகன் லூக் பிரேசி.  அவர்களில் ஒருவனாக நுழைந்து, அவர்களின் திட்டத்தை முறியடிக்க நினைக்கிறான். ஒரு கட்டத்தில் அவர்கள் செய்வது தவறு இல்லை என்று தெரியவர, அவர்களுடன் இணைகிறான். இதனால் எஃப்.பி.ஐ. கவலை கொள்கிறது. நாயகனை திசை மாற்ற முடியுமா? புதிய சூரர்களிடம் இருந்து நாட்டின் பொருளாதாரத்தைக் காப்ப்பாற்ற முடியுமா…

Read More

டயனோசர் சர்க்கஸ் பார்க்கலாம் வாங்க…

டயனோசர் சர்க்கஸ் பார்க்கலாம் வாங்க…

விதவிதமான டயனோசர்களை வரிசையாக மூன்று படங்களில் ரசிகர்கள் பார்த்து சலித்திருப்பார்கள். அந்த தொழில்நுட்பங்களை குப்பையில் போட்டுவிடாமல், எதிர்காலத்தில் நடப்பதுபோல், ‘ஜுராசிக் வேல்டு’ (Jurassic  World) படத்தை உருவாக்கியிருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். முதல் ஜுராசிக்பார்க் படத்தில் கைவிடப்பட்ட தீவை, இந்தியர் ஒருவர் விலைக்கு வாங்கி அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் தீம்பார்க் உருவாக்கி நடத்துகிறார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உலகெங்கும் இருந்து மக்கள் வந்து பார்த்து டயனோசர் செய்யும் சர்க்கஸ்களை கண்டு ரசிக்கிறார்கள். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையத் தொடங்குகிறது. மீண்டும் எப்படி ரசிகர்களை கவர்வது என்று ஆராய்ச்சியாளர்கள் மூளையைக் கசக்குகிறார்கள். அதாவது கசக்குவதுபோல் நடிக்கிறார்கள். வழக்கம்போல் அனைத்து வில்லன்களும் செய்வதுபோல் நாலைந்து டயனோசர்களின் சக்திகளை ஒன்றிணைத்து ஒரே டயனோசர் உருவாக்குகிறார்கள். அப்புறமென்ன… அது மனிதர்களை வேட்டையாட…மனிதர்கள் அதனை வேட்டையாட… ஒரே களேபரம். குட்டி சைஸில் இருக்கும் மூன்று புத்திசாலியான…

Read More