செவ்வாயன் – The Martian – Review – 44 மார்க்

செவ்வாயன் – The Martian – Review – 44 மார்க்

விமர்சனம் – மார்ஷியன் (The Martian): வேற்று கிரக படம் என்றாலே விதவிதமான கற்பனையில் உருவான மிருகங்கள்(?) கொல்வதற்கு விரட்டும். அந்த உயிரினங்களிடம் இருந்து தப்பித்து எப்படி பூமிக்குத் திரும்புகிறார்கள் என்பதுதான் கதையாக இருக்கும். ஆனால் மார்ஷியன் கொஞ்சம் வித்தியாசமானவன். செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் குழுவில் ஒருவனாக இருக்கும் மார்க் வாட்னி, அங்கு  வீசும் கடுமையான புயலில் சிக்குகிறான். உயிர் பிழைப்பதற்காக தப்பிக்கும்  மற்றவர்கள் மார்க் இறந்துவிட்டான் என்று நினைத்து, அவர்கள் மட்டும் பூமியை நோக்கி பயணப்படுகிறார்கள். கண் விழித்துப் பார்க்கிறான் மார்க். மாபெரும் செவ்வாய் கிரகத்தில் தான் மட்டும் தனியே சிக்கியிருப்பதை கண்டு அதிர்கிறான். ஏதாவது ஒரு வகையில் ஆபத்து வரும் என்று நாம் பார்த்துக்கொண்டே இருக்க, வாட்னியோ உயிர் வாழ்வதற்கான போராட்டத்தை தொடங்குகிறான். அவனுடைய ஏர்ஷிப் விவசாய நிலமாக மாறுகிறது. விவசாயம் செய்வதற்காக எலக்ட்ரோலிஸிஸ் முறையில் தண்ணீர்…

Read More

மிஷன் இம்பாசிபிள் 5 – விமர்சனம் (Mission Impossible – Rogue Nation Review) 61 மார்க்

மிஷன் இம்பாசிபிள் 5 – விமர்சனம் (Mission Impossible – Rogue Nation Review) 61 மார்க்

டாம் குரூஸ் நடித்திருக்கும் மிஷன் இம்பாசிபிள் 5-வது பாகத்திற்கு ’முரட்டு தேசம்’ என்று தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ, அடங்காத குதிரையைப்போல் அதிரடியைக் கிளப்பி அசத்துகிறது. இதுவரை வெளியான மிஷன் இம்பாசிபிள் நான்கு பாகங்களும் வெற்றி பெற்ற நிலையில், இனியும் அதே பாணியில் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றுதான் சினிமா விமர்சகர்கள் கருதினார்கள். இவர்களது ஆருடத்தை பொய்யாக்கி மீண்டும் வெற்றிக்கோட்டைத் தொட்டிருக்கிறார் டாம் குரூஸ். ஒரு விமானத்தில் தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்கள் கடத்துவதைத் தடுக்கும் முயற்சியில், விமானத்தில் தொங்கிக்கொண்டு பொறி பறக்க அறிமுகமாகிறார் டாம் குரூஸ். இந்தக் காட்சியில் நடிப்பதற்காக நிஜமாகவே விமானத்தில் தொங்குவதைப் போன்று பயிற்சி எடுத்து நடித்தாராம், இப்போது 53 வயதைத் தொடும் டாம் குரூஸ். இனிமேல் ஆக்‌ஷன் வேடத்தில் இருந்து டாம் குரூஸ் ஓய்வு பெறுவார் என்ற வதந்தியை முறியடிப்பதற்காகவே இந்த…

Read More

கிச்சுகிச்சு மினியன்ஸ் – விமர்சனம் (Minions Review) 40.5 மார்க்

கிச்சுகிச்சு மினியன்ஸ் – விமர்சனம் (Minions Review) 40.5 மார்க்

மினியன்ஸ் விமர்சனம்:  பரமார்த்த குருவின் முட்டாள் சீடர்கள் கதையைப் படித்திருப்பீர்கள். அவர்கள் எத்தனை புத்திசாலித்தனத்துடன் காரியங்கள் செய்தாலும், முடிவு என்னவோ முட்டாள்தனமாகத்தான் இருக்கும். இந்த கேரக்டரை மையமாக வைத்து சார்லி சாப்ளின் தொடங்கி நமது செந்தில், வடிவேலு வரையிலும் ஏகப்பட்ட பேர் காமெடி செய்து முடித்துவிட்டார்கள். இந்த விஷயத்தை மட்டுமே மையமாக எடுத்துக்கொண்டு, மினியன்ஸ் முழுநீள அனிமேஷன் 3டி திரைப்படமாக வெளிவந்துள்ளது. ‘யெஸ் பாஸ்’ என்று எப்போதும் வில்லன்களுக்கு அடியாட்களாக நிற்கும் கும்பல் என்று மினியன்களை சொல்லலாம். டெஸ்பிகபிள் மி திரைப்படத்தில் வில்லன்களுக்கு உதவியாளர்களாக வந்து புகழ்பெற்றதால், இந்த மினியன்களுக்கு இந்தப் படத்தில் நாயகர்களாக புரமோஷன் கிடைத்திருக்கிறது. இனி கதைக்குப் போகலாம். காலங்களை எல்லாம் கடந்து வாழ்ந்து வருகிறார்கள் மினியன்கள். குட்டியூண்டு சைஸில் மஞ்சள் கலர் வாழைப்பழம் போல் இருக்கும் இந்த மினியன்களின் ஒரே வேலை வில்லன்களைத்…

Read More

ஆன்ட்-மேன் விமர்சனம் (Ant-Man Review) – ராஜமெளலியிடம் தோற்றுப்போன ஆன்ட்-மேன் – 47 மார்க்

ஆன்ட்-மேன் விமர்சனம் (Ant-Man Review) – ராஜமெளலியிடம் தோற்றுப்போன ஆன்ட்-மேன் – 47 மார்க்

ஆன்ட்-மேன் விமர்சனம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனம் பத்து வருடங்களுக்கும் மேலாக ஆய்வுசெய்து, இப்போதுதான் ஆன்ட்-மேன் ஹீரோவை திரைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். குட்டியூண்டு ஈ-யைக் காட்டி இந்தியாவை அலறடித்த ராஜமெளலியின் அதிரடி அட்டகாசம் இல்லாத காரணத்தால், சுறுசுறுப்பு நிறைந்த கடி எறும்பாக இருக்கவேண்டிய ஆன்ட்-மேன், சோம்பையான பிள்ளையார் எறும்பாகிவிட்டது. 1989-ம் ஆண்டு பிளாஸ்பேக்கில் படம் ஆரம்பமாகிறது. விஞ்ஞானி ஹாங்க் பிம் கண்டுபிடித்த ஆன்ட்-மேன் டெக்னாலஜியை தவறாகப் பயன்படுத்துகிறது ஷீல்ட் நிறுவனம். அதனால் கோபமாகும் பிம், அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி ஒரே மகள் ஹோப் வான் டெய்னுடன் வாழ்கிறார். எறும்பு முகமூடி போன்ற உடையை அணிந்துகொண்டால், அணிபவர் எறும்பு அளவுக்கு சிறிய உருவத்துக்கு மாறிவிடுவார். ஆனால் அவருக்கு மனிதன் அளவுக்கு பலம் இருக்கும் என்பதுதான் ஆன்ட்-மேன் டெக்னாலஜி. ஆன்ட்-மேன் டெக்னாலஜியை கைப்பற்ற முடியாத காரணத்தால், பிம்-மின் முன்னாள் சிஷ்யப் பிள்ளையான…

Read More

பாகுபலி – விமர்சனம் (Bahubali – Review) டெக்னிக்கல் மிரட்டல்… திரைக்கதை தடங்கல்

பாகுபலி – விமர்சனம் (Bahubali – Review) டெக்னிக்கல் மிரட்டல்… திரைக்கதை தடங்கல்

மொழியைத் தாண்டி ரசிக்கக்கூடியது சினிமா. அதனால்தான் ராஜமெளலி எந்த ஊர்க்காரர் என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தமிழ் ரசிகர்களும் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். மஹாதீரா,  நான் ஈ பட வரிசையில் அகில இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி, முக்கால் கிணறுதான் தாண்டியிருக்கிறது. ஆனாலும் டெக்னிக்கலாக மிரட்டி… ரசிகனை திறந்த வாய் மூடாமல் பார்க்க வைத்திருக்கிறார். இதுவரை கற்பனை கதைகளை மட்டுமே இயக்கிவந்த மெளலி, முதன்முறையாக வரலாற்றுக் கதையைத் தொட்டிருக்கிறார். ஜைன மதத்தின் தொடக்கம் என்பது முழு வரலாறாக பதிவு செய்யப்படாத காற்றுவழிச் செய்தி என்பதால், பாகுபலி வரலாற்றில் தன்னுடைய காதல் கதையை இடைச்செருகலாக நுழைத்து சுவாரஸ்யம் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆரம்பத்திலும் இடம்பெறும் 10 நிமிட காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்துவிடும். அப்படித்தான் அதிரடியாக தொடங்குகிறது படம். அரச வாரிசு பாகுபலியை எதிரிகளிடம்…

Read More

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் (Terminator Genisys) ஜஸ்ட் ஃபெயில் 34 மார்க்

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் (Terminator Genisys) ஜஸ்ட் ஃபெயில் 34 மார்க்

வீணாகிப் போன இட்லியில் செய்யப்பட்ட உப்புமாவைப் போலவே இருக்கிறது டெர்மினேட்டர் ஜெனிசிஸ். முதல் முறையாக இந்த டெர்மினேட்டரை ரசிக்கும் குட்டிப் பையன்களுக்கு வேண்டுமானால் இது சூப்பராக இருக்கலாம். கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர் 1984-ல் வெளியான டெர்மினேட்டர் முதல் பாகமும் 1991-ல் வெளியான டெர்மினேட்டர் ஜட்ஜ்மெண்ட் டே படமும் சூப்பர் டூப்பர் ஹிட். ஏனென்றால் அர்னால்ட், ஜேம்ஸ் காம்ரூன் இருவரும் இணைந்து ஒட்டுமொத்த வித்தையையும் இறக்கிவைத்திருந்தார்கள். அதன்பிறகு மற்றவர்கள் இயக்கத்தில் அடுத்தடுத்து வந்த இரண்டு பாகங்களும் அவுட். இப்போது வந்திருக்கிறது ஐந்தாவது பாகமாக டெர்மினேட்டர் ஜெனிசிஸ். என்ன நடந்தாலும் கதையில் சிறு மாற்றம்கூட பண்ணுவதில்லை என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கிறார்கள். இந்தக் கதை 2029-ம் ஆண்டு நடக்கிறது. வழக்கம்போல் எதிர்கால உலகத்தை இயந்திரங்கள் ஆட்சிசெய்ய முயற்சி செய்கின்றன. மனிதர்களை முழுமையாக அழிப்பதற்காக ஸ்கைநெட் தலைமையில் இயந்திரங்கள் களம் இறங்குகின்றன. இந்த இயந்திரங்களின்…

Read More

சரவணபவன் டயனோசர் – ஜுராசிக் வோர்ல்டு விமர்சனம்

சரவணபவன் டயனோசர் – ஜுராசிக் வோர்ல்டு விமர்சனம்

சரவணபவன் ஓட்டலின் இட்லி, சாம்பார் எப்போதும் ஒரே ருசியில்தான் இருக்கும். ஆனால் அந்த ருசி குறையாது, வயிற்றுக்கும் பிரச்னை செய்யாது என்பதால் நம்பி சாப்பிடலாம். அப்படித்தான் ஜுராசிக் பார்க் தொடங்கி வெளியான மூன்று பாகங்களிலும் டயனோசர்கள் என்னவெல்லாம் செய்யும் என்பது நன்றாகவே தெரியும். நாம் எதிர்பார்த்தபடிதான் இப்போது ரிலீசாகியிருக்கும் நான்காம் பாகமான ஜுராசிக் வோர்ல்டு படமும் இருக்கிறது என்றாலும் தவிர்க்காமல் பார்க்கவேண்டிய படம். ஜுராசிக் பார்க் முதல் பாகத்தில் இருந்து  22வது ஆண்டில் இந்த நான்காம் பாகம் தொடங்குகிறது. ஒரு தீவில் ஜூராசிக் வோர்ல்டு என்ற தீம்பார்க் மிகமிக பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் இருந்து ரசிகர்கள் ஜுராசிக் வோர்ல்டுக்கு வருகைதந்து விதவிதமான டயனோசர்களை பார்த்து ரசிக்கிறார்கள். டயனோசர் மீது ஏறி விளையாடுகிறார்கள். குட்டிக்கரணம் போடும் ரேப்டர் டயனோசர்களில் இருந்து நீருக்குள் மூழ்கியிருக்கும் ராட்சச டயனோசர் வரையிலும் விதவிதமாக இருக்கின்றன….

Read More

மொட்டை ராக் கெட்ட ராக் – San Andreas விமர்சனம்

மொட்டை ராக் கெட்ட ராக் – San Andreas  விமர்சனம்

ஆட்டம் காணும்  சான் ஆன்ட்ரியாஸ்:  ஆபத்து நேரத்தில் மக்களைக் காப்பாற்றும் உன்னதமான பணியில் இருக்கும் மொட்டை ராக், அப்படியொரு சிக்கல் நேரும்போது ஊர், உலகத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னுடைய மனைவி, மகளை பத்திரமாக காப்பாற்றுவதுதான் கதை. இதுபோன்ற ஆயிரத்தெட்டு கதைகளில் சில்வஸ்டர் ஸ்டோலனும் அர்னால்டும் நடித்ததை ராக் பார்த்ததே இல்லையோ?  சரி, கதைக்குள் ஸாரி, அப்படியொன்று இல்லை என்பதால் படத்துக்குள் போகலாம். கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர் கண் எதிரே தன் மகளை காப்பாற்றமுடியாத சூழலுக்கு ஆளான ராக் (கதாப்பாத்திரத்தின் பெயர்  – ரே), அடுத்த மகளுக்கும் அப்படியொரு ஆபத்து நேரும்போது என்ன செய்கிறார் என்ற ஒன்லைனை வைத்து கதை பின்னியிருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் எப்போதும் ஆரம்பகாட்சி மட்டும் மிரட்டலாக இருக்கும். அப்படியொரு காட்சிக்கு முயற்சித்து மொக்கையாக அமைத்திருக்கிறார்கள். காப்பாற்றுவதற்கு ராக் இத்தனை சிரமப்படுவார் என்று தெரிந்தால், அந்தப் பெண்ணே கதவைத் திறந்துகொண்டு சாதாரணமாக மலையேறி…

Read More

67 வயசு தாத்தாவும் அஞ்சு ஆசை நாயகிகளும்

67 வயசு தாத்தாவும் அஞ்சு ஆசை நாயகிகளும்

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு  –  விமர்சனம் எதிர்காலத்தில் உலகப்போர் நடப்பதாக இருந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகளும் வரலாற்று ஆய்வாளர்களும் உறுதியாகச் சொல்கிறார்கள். இதையே தன்னுடைய சாகசபாணியில் அதிரடியாக சொல்லி உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து கல்லா கட்டியிருக்கிறது ‘மேட் மேக்ஸ்’ படத்தின் நான்காம் பாகமான ‘மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு’. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்களிலும் எரிபொருளை மையமாக வைத்துத்தான்  கதையை நகர்த்தியிருந்தார் இயக்குனர் ஜார்ஜ் மில்லர். இப்போது தண்ணீரையும் ஐந்து பெண்களையும் சேர்த்துக்கொண்டு  ரசிகனை கனவுக்கும் எட்டாத தூரத்திற்கு அழைத்துச் செல்கிறார் இயக்குனர். மூன்று வேளை சாப்பாடு, போட்டுக்கொள்ள ஆடை, தங்குவதற்கு வீடு என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லாத எதிர்கால கற்காலத்தில் கதை நடக்கிறது. அந்த உலகத்தின் அத்தியாவசியத் தேவையான தண்ணீரும் எரிபொருளும்  வில்லன் இம்மார்ட்டன் ஜோவின் கைகளில்தான் இருக்கிறது. அதனால் அவன் வைத்ததுதான்…

Read More

ரஜினி, கமல் நடிப்பில் ‘எஸ்கேப் பிளான்’

ரஜினி, கமல் நடிப்பில் ‘எஸ்கேப் பிளான்’

’நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கும்வகையில் அழுத்தமான கதை அமைந்தால் நிச்சயம் சேர்ந்து நடிப்போம்’ என்று அவ்வப்போது ரஜினியும், கமலும் வீராவேசமாகப் பேசுவார்கள். ஆனால், அதைத்தாண்டி கதையைத் தேடும் முயற்சியில் எப்போதும் இறங்கவே மாட்டார்கள். ஆனால் இவர்களைப்போன்று  ஈகோ எதுமே இல்லாமல் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களான சில்வர்ஸ்டர் ஸ்டோலன், அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் இருவரும் சேர்ந்து கலக்கியிருக்கும் படம்தான், ‘எஸ்கேப் பிளான்’. கேரக்டருக்காக எத்தனைதூரம் மெனக்கெட வேண்டும் என்று இரண்டு பேருமே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். கொடுமையான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்குள் சிக்கியிருக்கிறார் அர்னால்ட். எந்த இடத்தில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது, எத்தனை நேரத்துக்கு ஒரு முறை காவல் மாறுகிறது என்பதை எல்லாம் துல்லியமாக கவனித்து அந்த சிறையில் இருந்து தப்பிக்கிறார். சிறையில் இருந்து குறிப்பிட்ட தூரத்தைக் கடந்ததும் அவரே விரட்டிவரும் காவலர்களிடம் சரண் அடைகிறார். அதன்பிறகுதான் ஓர் உண்மை…

Read More