ராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்

ராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்

முதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி.  கண்களால் காணும் கனவை காட்சியாக மாற்றும் வித்தை ராஜமெளலிக்கு  பிரமாதமாக கைவந்திருக்கிறது.  அதனால் பிரமாண்டத்துக்கும் அப்பால் கனவு கண்டு, அதனை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். பாகுபலி முதல் பாகத்தில் என்ன நடந்தது என்பதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்  இரண்டாம் பாகத்தை ஒரு புதிய படமாகவே நினைத்ததில் புத்திசாலித்தனம் தெரிகிறது. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஒரு வரி மட்டும்தான்  முதல் பாகத்தின் தொடர்ச்சி. நெஞ்சை தொடும் வகையிலும், நம்பகத்தன்மை கெடாமலும், படத்தின் எந்த ஒரு கேரக்டரின் தன்மை மாறாமலும் விடை அளித்ததால், இந்தப் படம்  வெற்றியைத் தொட்டுவிட்டது. பாகுபலியாக வரும் பிரபாஸ் வாழ்க்கையில் இனியொரு முறை இத்தனை சிறப்பான பாத்திரம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அனுஷ்காவை பார்த்ததும் காதல்…

Read More

பாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)

பாக்கவே பாக்காதீங்க – பாசஞ்சர்ஸ் – 37 மார்க் (Passengers)

ஜெனிபர் லாரன்ஸ், கிறிஸ் பிராட் போன்ற அதிபிரபலங்கள் நடித்திருந்தாலும், திரைக்கதை சரியாக அமைக்கப்படவில்லை என்றால் தேறவே தேறாது என்பதற்கு சமீபத்திய உதாரணம் பாசஞ்சர்ஸ். 5,000 பயணிகளுடன் அவலோன் எனப்படும் விண்வெளி கப்பல் ஹோம்ஸ்டெட் 2 என்ற கிரகத்தை நோக்கி பயணமாகிறது. அந்த கிரகத்தை சென்றடைவதற்கு 120 ஆண்டுகள் ஆகும் என்பதால், அனைவரும் தூக்கநிலையில் ஆழ்த்தப்பட்டுள்ளார்கள். தற்செயலாக விண்வெளி கப்பல் மீது மிகப்பெரிய வின்பாறை மோதிய விபத்தில் மின்சார பழுது ஏற்பட்டு நாயகன் ஜிம் பிரஸ்டனுக்கு (கிறிஸ் பிராட்) மட்டும்  விழிப்பு வருகிறது. விண்வெளி களத்தில் அத்தனை பேரும் தூங்கிக்கொண்டிருக்க தன்னந்தனியே விழித்துக்கொண்டு இருக்கிறான் ஜிம். அவனுக்கு துணையாக இயந்திர மனிதன் ஆர்தர் மட்டுமே இருக்கிறான். இன்னும் 90 ஆண்டுகள் கழித்துத்தான் அத்தனை பேரும் விழிப்பார்கள், அதற்குள் தான் செத்துப்போய்விடுவோம் என்ற எண்ணத்தில் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகிறான்….

Read More

கலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்

கலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்

இந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். அப்படியொரு அனுபவத்தை மீண்டும் கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. கதைக்காக ரொம்பவும் மெனக்கெடாமல் வசனங்களாலும், கதாபாத்திரங்களாலும் கதையை நகர்த்தி ஜாலியான ஒரு மேட்ச் பார்த்த திருப்தியை கொடுத்துவிட்டார் என்பது மட்டும் உண்மை. முதல் பாகத்தில் வந்தவர்களில் பெரும்பாலோ, கிரிகெட்டை மறந்து குடும்பம், குட்டி என்று செட்டிலாகி இருக்கிறார்கள் என்பதை நீட்டிமுழக்கி சொல்வதாக, படம் ஆரம்பமாகிறது. அத்தனை பேரும் ஓன்றுசேர்ந்து ஜெய் கல்யாணத்துக்காக தேனி போனதும் கதை சூடு பிடிக்கிறது. திடீரென தேனியில் சந்திக்கும் பழைய நண்பன் அரவிந்திற்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டையே மறந்தவர்கள் அரையிறுதியில் அடித்து நொறுக்கிறார்கள். அதனால் கடுப்பாகும் ஊர் டீம் கேப்டன் வைபவ், சென்னை டீமை வெல்வதற்கு மறைமுகமாக திட்டம் போடுகிறான். சொப்பனசுந்தரியை வைத்து டீம் ஆட்களை மயக்கி போட்டோ எடுத்துவிடுகிறான்….

Read More

தற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)

தற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)

எந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை மாபெரும் தியாகம், மாவீரம் என்று சொல்வதால், சுசீந்திரன் சொல்லவந்த கருத்து அத்தனையும் அடிபட்டு போகிறது. அழுத்தம் திருத்தமாக சாதி பிரச்னையை பேசவேண்டும் என்பதற்காக 1987க்கு போயிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இன்றும் சாதிப் பிரச்னை உச்சத்தில் இருக்கும்போது, எதற்காக மெனக்கெட்டு அந்தக் காலகட்டத்தை தேர்வு செய்தார் என்பதுதான் ஆச்சர்யம். சாதி பிரச்னை எல்லாம் அந்தக் காலகட்டத்தில் மட்டும்தான் இருந்ததோ, இப்போது இல்லையோ என்ற மாய தோற்றத்தை இன்றைய நகரத்து இளசுகள் மத்தியில் விதைக்கும் அபாயம்  இந்தப் படத்தில் இருக்கிறது. உயர் சாதி மக்கள் வசிக்கும் பாதையில் கீழ் சாதி பிணம் போகக்கூடாது என்ற பிரச்னையுடன் படம் ஆரம்பமாகிறது. நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், பிணம் மட்டுமே அந்த வழியில் போகும் நிலை ஏற்படுகிறது. இந்த நேரத்தில்தான் மாநிலத்திலேயே…

Read More

ஏகப்பட்ட ஜோக்கர்ஸ் – 41 மதிப்பெண்கள் (Joker Movie Review)

ஏகப்பட்ட ஜோக்கர்ஸ் – 41 மதிப்பெண்கள் (Joker Movie Review)

ஒன்று அல்லது இரண்டு ஜோக்கர்களுடன் சீட்டு விளையாடத் தொடங்கினால், ஆட்டம் படு சுவாரஸ்யமாக இருக்கும். எடுக்கும் அத்தனை கார்டுகளும் ஜோக்கராக வந்துகொண்டே இருந்தால்… சந்தோஷப்படவும் முடியாமல் கீழே போடவும் முடியாமல் தடுமாற வேண்டும். அப்படி  பாராட்டவும் முடியாமல் திட்டவும் முடியாமல் குழப்பவைக்கும்   படம்தான் ஜோக்கர். மனநல தடுமாற்றத்தில் இருக்கும் மன்னர்மன்னனுக்கு சிகிச்சை அளிப்பதுதவிர அத்தனை காரியங்களிலும் பொன்னூஞ்சலும் இசையும் துணை நிற்கிறார்கள். கனவு ஜனாதிபதியாகவே மன்னர்மன்னன்  தொடரவேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையா என்ற எண்ணம் முதல் காட்சியிலே வந்துவிடுவதால், அடுத்தடுத்த காட்சிகள் எல்லாமே பட்டாசு தோரணமாகத்தான் தெரிகிறது. எஸ்.வி.சேகர் நாடகங்களில் ஆங்காங்கே கதைக்கு சம்பந்தமில்லாமல் டயலாக்கில் நகைச்சுவை தெறித்துக்கொண்டே இருப்பதுபோல், அரசாங்கத்திற்கு சாட்டையடி ஒவ்வொரு ஷாட்டிலும் விழுந்துகொண்டே இருக்கிறது. ஏன் இப்படி இருக்கிறார் மன்னர்மன்னன் என்ற கேள்விக்கு விடை வருகிறது. ஒரு தண்ணீர் நிறுவனத்தில் வேலை செய்யும்…

Read More

தி காஞ்சரிங் 2 விமர்சனம் (THE CONJURING 2 REVIEW) – 54 மார்க்

தி காஞ்சரிங் 2 விமர்சனம் (THE CONJURING 2 REVIEW) – 54 மார்க்

பயத்தில் கத்துவதைக் கேட்பதற்கு எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அதனால்தான் குழந்தைகளை பயமுறுத்துகிறேன் என்று வாக்குமூலம் கொடுக்கிறது ஒரு பேய். இதைத்தான் இயக்குனர் ஜேம்ஸ் வான்செய்திருக்கிறார். படம் பார்க்கும் ரசிகனை கொஞ்சம் கொஞ்சமாக படத்துக்குள் இழுத்து… பேய் வரும்போது அலற வைப்பதில்தான் அமானுஷ்ய படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. அந்த வகையில் திக்திக் என திகில் கிளப்புவதால்,  தி காஞ்சரிங் 2 (The Conjuring 2) – நிச்சயம் பார்க்கவேண்டிய பேய்ப்பட பட்டியலில் சேர்கிறது. வேப்பிலை, திருநீறுடன் நம்மூரு மந்திரவாதிகள் பேய் விரட்டுவதை, கேமரா வைத்துக்கொண்டு விஞ்ஞான முறையில் சிலுவை துணையுடன் செய்கிறார்கள் பாட்ரிக் வில்சனும் அவனது காதல் மனைவி வேரா ஃபார்மிகாவும். ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும் அங்கே ஆவி இருக்கிறதா என்பதை தன்னுடைய உள்ளுணர்வால் உணரும் சக்தியுடன் இருக்கிறாள் வேரா. ஆவி எதற்காக அட்டகாசம் செய்கிறது என்பதை கண்டறிந்து விரட்டுவதுதான்…

Read More

தல v தளபதி = பேட்மேன் v சூப்பர்மேன் (Batman V Superman) – விமர்சனம் – 44 மார்க்

தல v தளபதி = பேட்மேன் v சூப்பர்மேன் (Batman V Superman) – விமர்சனம் – 44 மார்க்

கும்முகும்முன்னு கும்முறாங்க – பேட்மேன் சூப்பர்மேன் – 44 மார்க்: ரெண்டு பேரும் நல்லவஞ்சதான். ஆனா, ஒருத்தரை ஒருத்தர் தப்பா நினைச்சு மல்லுக்கட்டுறாங்க. உண்மை தெரிஞ்சதும் பொது எதிரியை தீர்த்துக்கட்டும் அரதப்பழசான கதைக்கு மசால் தடவி ஆலிவ் ஆயிலில் பொரித்துக் கொடுத்திருக்கும் மசாலா படம் பேட்மென்  vs சூப்பர்மென் டான் ஆஃப் ஜஸ்டிஸ். நம்ம ஊர் தல, தளபதியை ஒண்ணா நடிக்கவைச்சா, எப்படியிருக்குமோ, அப்படியொரு அலப்பறை. கதையிலும் திரைக்கதையிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சுவாரஸ்யமான படமாக மாறியிருக்கலாம். வேற்றுக்கிரகவாசி ஒருவனை சூப்பர்மேன் மோதி அழிக்கிறான். இந்த அதிரடி போராட்டத்தில், பேட்மேன் வசிக்கும் கோதம் சிட்டி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தன்னை கடவுளாக மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்காக சூப்பர்மேன் அதீதமாக செயல்படுவதாக பேட்மேன் ஆக வரும் புரூஸ் வைன் நினைக்கிறான். அதேநேரம் பத்திரிகையாளர் கிளர்க் கெண்ட் ஆக வரும் சூப்பர்மேனுக்கு பேட்மேன்…

Read More

கொஞ்சம் ஜிவ்வு, கொஞ்சம் ஜவ்வு – ரூம் – 42 மார்க் (Room Movie Review)

கொஞ்சம் ஜிவ்வு, கொஞ்சம் ஜவ்வு  – ரூம் – 42 மார்க் (Room Movie Review)

விமர்சனம் – ரூம் : தனியறைக்குள் அடைத்து கொடுமைப்படுத்தும் சைகோ படங்கள் நிறையவே பார்த்துவிட்டோம். அந்த சைகோ எப்படிப்பட்ட கொடியவன் என்பதை காட்டாமல், அறைக்குள் அடைபட்டிருக்கும் அம்மா, மகன் மனநிலை எப்படியிருக்கும் என்று காட்டியவகையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது ரூம்.  அம்மாவும் மகனும் சிரமப்பட்டு தப்பியபிறகு ஏற்படும் மனநிலை பிறழ்வை காட்டி ஜவ்வடிக்கும்போது, நிறையவே சலிப்பும் வருகிறது. ஆனாலும், ஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் பிரி லார்சன் மற்றும் குட்டிப்பையன் ஜேகப் டிரெம்பிளே நடிப்புக்காகவும் பார்க்க வேண்டிய படம் ரூம். காலை கண் விழித்ததும் டி.வி., பெட், சேர், தலையணை, ஷிங்க், பிளேட், கிளாஸ் என கண்ணில் கண்ட அத்தனை பொருட்களுக்கும் குட்மார்னிங் சொல்கிறான் ஜாக். ஆண் பிள்ளையின் பெயராக இருந்தாலும் பெண் பிள்ளை போல் முடி வளர்ந்து தொங்குகிறது. அம்மா ஜாய் அவனுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறாள், குளிக்கிறாள், விளையாடுகிறாள், கதை சொல்கிறாள்,…

Read More

மரண அவஸ்தை (நமக்கும்தான்) – த ரெவன்னென்ட் 34 மார்க் (The Revenant Review)

மரண அவஸ்தை (நமக்கும்தான்) – த ரெவன்னென்ட் 34 மார்க் (The Revenant Review)

விமர்சனம் – த ரெவன்னென்ட்: அவார்டு போதைக்கு ரசிகர்களை ஊறுகாய் ஆக்கியிருக்கிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. டாம் ஹாங்க்ஸ் நடித்த காஸ்ட் அவே தொடங்கி அப்பல்லோ 13, எவரெஸ்ட் போன்ற ஏகப்பட்ட உயிர் போராட்ட சினிமா பார்த்துவிட்டதாலோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதிவரை அலுப்பும் சலிப்புமாக நகர்கிறது ரெவன்னென்ட். இனி, கொஞ்சமாக தென்படும் கதைக்குப் போகலாம். 1820களில் கதை நடக்கிறது. காட்டு மிருகங்களை வேட்டையாடி தோல் வியாபாரம் செய்யும் ஒரு கும்பல் காட்டுக்குள் முகாம் போட்டிருக்கிறது. ஏராளமான மிருகங்களை வேட்டையாடி முடித்த நேரத்தில், திடீரென அந்தப் பகுதியை சேர்ந்த செவ்விந்தியர்கள் அதிரடி தாக்குதல் நடத்துகிறார்கள். திடீர் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் 30 பேர் செத்துப்போக, க்ளாஸ் ஆக வரும் டிகாப்ரியா உள்ளிட்ட 10 பேர் மட்டும் படகில் தப்பிச்செல்கிறார்கள். தொடர்ந்து படகில் செல்வது ஆபத்து என்பதால், காட்டு வழியே நடந்துசெல்வதே பாதுகாப்பு…

Read More

ஸ்டார் வார்ஸ் – விமர்சனம் (Star Wars The Force Awakens – Review) – 71 மார்க்

ஸ்டார் வார்ஸ் – விமர்சனம் (Star Wars The Force Awakens – Review) – 71 மார்க்

விமர்சனம் – Star Wars : The Force Awakens லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் சூப்பர் ஸ்டாரை போல், ஸ்டார் வார்ஸ் இந்தியாவில் ஒரு வாரம் தாமதமாக ரிலீஸ் என்றாலும் அதிரிபுதிரியான வெற்றி பெற்றுள்ளது. தமிழ் படங்களின் கலெக்‌ஷனை எல்லாம் தடுமாற வைத்திருக்கும் ஸ்டார் வார்ஸ்: த ஃபோர்ஸ் அவேகன்ஸ் படத்தில் என்னதான் இருக்கிறது என்பதற்கான மேலோட்ட விமர்சனம் இதோ… ஏற்கெனவே ஸ்டார் வார்ஸ் ஆறு பாகங்கள் வந்திருந்தாலும், அவற்றை பார்க்காத ரசிகர்களும் ரசிக்கும்படி ஆக்‌ஷன் கலந்த சயின்டிஃபிக் ஃபான்டஸியாக படம் தயாராகியுள்ளது. இந்த ஸ்டார் வார்ஸ் கதை நடைபெறும் இடம்,  நமது சூரிய காலக்ஸியைத் தாண்டிய வேறு ஒரு காலக்ஸி என்பதும், தீய கும்பலை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த  கடைசி ஜெடாய் வீரன் லூக் ஸ்கைவாக்கர் (மார்க் ஹாமில்) காணாமல் போய்விட்டான் என்பதை மட்டும் தெரிந்திருந்தால் போதும், கதைக்குள் நுழைந்து ரசிக்கத் தொடங்கலாம். 30…

Read More