ஜெயிக்கப்போவது அனுஷ்கா ஷர்மாவா, சாக்‌ஷியா?

ஜெயிக்கப்போவது அனுஷ்கா ஷர்மாவா, சாக்‌ஷியா?

சபாஷ், சரியான போட்டி. மழை கொடுத்த இடைவேளையில் ஒரு கதகதப்புக்காக தன்னை சந்திக்கவந்த விராட்கோலிக்கு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்ததில் நம்ம அனுஷ்கா ஷர்மாவுக்கு எக்கச்சக்க கோபமாம். ஏனென்றால் இதுபோல் டோனி ஏகப்பட்ட தடவை இடைவேளை நேரங்களில் சாக்‌ஷியை சந்தித்துப் பேசியது நடந்திருக்கிறதாம். இப்போது நாடெங்கும் கிரிக்கெட்டில் கோலிக்கு ஆதரவு பெருகிவருவதைப் பொறுக்கமுடியாமல், டோனி சொல்லித்தான் இப்படியொரு எச்சரிக்கையை கிரிக்கெட் வாரியம் விதித்திருக்கிறது என்று நினைக்கிறாராம் அனுஷ்கா ஷர்மா. அதனால் இப்போது அவர் கோபத்தை சாக்‌ஷி மீதுதான் காட்டுகிறார். ‘எப்படியும் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு தகுதி பெற்றுவிடும். சென்னை தகுதி பெறுவது கடினம்தான். ஒருவேளை கஷ்டப்பட்டு உள்ளே நுழைந்துவிட்டால், அதனை தோற்கடித்தபிறகு நான் இதுபற்றி உரக்கப்பேசி நியாயம் கேட்பேன்’ என்று நெருக்கமானவர்களிடம் புலம்பிக்கொண்டு இருக்கிறாராம். அதானே… அனுஷ்காவுக்கு ஒரு நியாயம், சாக்‌ஷிக்கு ஒரு நியாயமா? அழகுக்கு ஒரு சோதனை…

Read More

கஞ்சா புகைக்கும் கிறிஸ்டன் ஸ்டுவர்ட்

கஞ்சா புகைக்கும் கிறிஸ்டன் ஸ்டுவர்ட்

இயக்குனர் பாலா இயக்கிய, ‘பிதாமகன்’ படத்தில் அறிமுகமான கஞ்சா கருப்பு ஒரு பேட்டியில், ‘நான் உண்மையில் கஞ்சாவை சுவைத்ததே இல்லை. அது கருப்பா, வெள்ளையா என்பதும் தெரியாது. கேரக்டருக்காக கஞ்சா பார்ட்டி போல் நடித்தேன்’ என்று சத்தியம் செய்திருந்தார். இதையே உல்டாவாக சொல்கிறார் அமெரிக்க நடிகை கிறிஸ்டன் ஸ்டுவர்ட். கிறிஸ்டனுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தொடர்ச்சியாக ‘ட்விலைட்’ படங்களில் நடித்து ஹாலிவுட் நட்சத்திரப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பவர். இப்போது அவர் நடித்துவரும், ‘அமெரிக்கன் அல்ட்ரா’ படத்துக்காக தினமும் எக்கச்சக்கமாக கஞ்சா புகைக்கிறார் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. கதைப்படி அவர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரப் பறவை. எந்த நேரமும் ஜாலியாக இருக்க வேண்டும் என்பதற்காக கஞ்சா புகைப்பதற்கு அடிமை ஆகிறார். கஞ்சா போதை அவரை கனவுலகிற்கு இழுத்துச் செல்வதுடன், எப்போதும் சந்தோஷ மனநிலையிலும் வைத்திருக்கிறது….

Read More

சாண்ட்ராவை தேர்வு செய்தாரா நீதிபதி குமாரசாமி?

சாண்ட்ராவை தேர்வு செய்தாரா  நீதிபதி குமாரசாமி?

50 வயது இளைஞர்களின் கனவுக்கன்னி(?) சாண்ட்ரா புல்லக்கை 2015-ம் ஆண்டின் மிகச்சிறந்த உலக அழகி என்று பீப்பிள் பத்திரிகை தேர்வு செய்திருக்கிறது. இதைக் கேள்விப்பட்டதும், கிண்டல் செய்வதாக நினைத்து வாய்விட்டு சிரித்திருக்கிறார் சாண்ட்ரா. ‘என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணலியே’ என்று வடிவேலு பாணியில் கேட்டிருக்கிறார். அட, இதுதான் உண்மை என்று தெரியவந்ததும் அடக்கமாகவும் பெருந்தன்மையாகவும் அழகுப் பெருமையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார். அதோடு நிற்காமல் அழகுக்கு இலக்கணமும் சொல்லியிருக்கிறார். ‘அழகு பெறுவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பதுதான் உண்மையான அழகு. நான் இப்போது இயற்கை உணவு சாப்பிட்டு அமைதியான முறையில் வாழ்க்கை நடத்துகிறேன். அதுதான் என் அழகுக்குக் காரணமாக இருக்கலாம்’ என்றும் அறிவுரை சொல்லியிருக்கிறார். இதைக் கேள்விப்பட்டு கொதித்துப்போயிருக்கிறார் அமெரிக்காவின் அழகு தேவதை ஜிஜி ஹாதித். 19 வயதே ஆன இந்த அழகுப் புயல்தான், 2015-ன் அழகியாக வருவார் என்று…

Read More

நீங்கள் எக்ஸ்மேன் ஆவதற்கு அரிய வாய்ப்பு…!

நீங்கள் எக்ஸ்மேன் ஆவதற்கு அரிய வாய்ப்பு…!

எக்ஸ்மேன் என்றாலே, வோல்வரின் கதாபாத்திரம்தான் நினைவுக்கு வரும். வோல்வரினாக  நடிக்கும்  ஹுயூ ஜேக்மேன்  கைமுட்டியை ஆக்ரோஷமாக மடக்கியதும் விரல்களில் இருந்து கத்திகள் முளைத்து எதிரிகளை விதம்விதமாக பதம்பார்ப்பார். அவர் இப்போது, ’இனிமேலும் என் கைகளுக்குள் கத்திகளை மறைத்துவைக்க முடியாது. வோல்வரின் கதாபாத்திரத்தில் இருந்து விடைபெறுகிறேன்’ என்று டாட்டா காட்டியிருக்கிறார். இப்போது தயாரிப்பில் இருக்கும் எக்ஸ்மேன்: அபாகலிப்ஸ், வொல்வரின் 3 படங்களுக்கான ஒப்பந்தம் முடிந்ததும் விடைபெறுகிறாராம். இந்த இரண்டு படங்களும் 2016, 2017 ஆண்டுகளில் வெளியாகின்றன. இந்தப் படங்களையும் சேர்த்து ஏழு படங்களில் வோல்வரின் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார் ஜேக்மேன். இந்த திடீர்(?) முடிவுக்குக்  காரணமாக அவரது மனைவியைத்தான்  கைகாட்டுகிறார்.  தினமும்  உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருப்பதும், ஏகப்பட்ட நான் வெஜ் ஐட்டங்களைத் தின்று தீர்ப்பதையும்  மிகவும் இடைஞ்சலாக கருதுகிறாராம் அவர்  மனைவி டெபொரா-லீ ஃபர்னீஸ்.  இத்தனை வருடங்களாக மனைவி…

Read More