குட்டீஸ்களுக்காக சங்குசக்கரம்

குட்டீஸ்களுக்காக சங்குசக்கரம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுக்க முழுக்க குழந்தைகள் படமாக சங்குசக்கரம் படத்தை பிரமாண்டமாக தயாரித்துவருகிறார் கே.சதீஷ். K Sathish (@sathishoffl) புதுமுக இயக்குனர் மாரிசன் இயக்கத்தில் ஃபேன்டஸி படமாக தயாராகும் சங்குசக்கரம் வரும் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு குதூகலம் தருவதற்காக வருகிறது. இந்தப் படம் குறித்து பேசினார் கே.சதீஷ். மை டியர் குட்டிச்சாத்தான், அஞ்சலி போன்ற ஒரு சில படங்களே குழந்தைகளை மகிழ்வித்தன. அந்த வகையில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்து மட்டுமின்றி மாய உலகையும் காட்டி மகிழ்விக்க வருறது சங்கு சக்கரம். அது மட்டுமின்றி படம் முழுக்க நகைச்சுவை கொட்டிக்கிடக்கும் இந்தப் படத்தின் முக்கியமான வேடத்தில் திலிப் சுப்பராயன் நடிக்கிறார். பசங்க படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கீதா, நிசிகேஷ் ஆகியோர் கதையை கொண்டுசெல்ல, ஷபீர் இசை அமைக்கிறார். இந்தப்படம் குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டது என்றாலும் பெரியவர்களும்…

Read More

தனுசுக்கு ஆஸ்காரு – The Fakir 2017

தனுசுக்கு ஆஸ்காரு – The Fakir 2017

ஆஸ்கார் நாயகன் என்று நம்மூரு கமல்ஹாசனை கூப்பிட்டுவந்த, அவரது ரசிகர்கள் களைத்துப்போய் உலக நாயகனுக்கு மாறிவிட்டார்கள். இப்போது அந்த இடத்தை தனுஷ்க்கு தருவதற்கு முடிவெடுத்திருக்கிறார் மார்ஜான் சட்ராப்பி (Marjane Satrapi). ஈரானில் பிறந்து பிரான்ஸில் எழுத்தாளராக, ஓவியராக, இயக்குனராக இருக்கும் மார்ஜான், இந்தியாவிலேயே பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரே நடிகர் தனுஷ். அதனால்தான் தனுஷை த எக்ஸ்ட்ராடினர்ரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் படத்துக்கு நாயகனாக்கி இருக்கிறேன் என்கிறார். இந்தப் படத்தின் கதை The Extraordinary Journey Of A Fakir Who Got Trapped In An Ikea Wardrobe என்ற பெயரில் வெளியான பிரெஞ்சு நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த நாவல் கிட்டத்தட்ட 35 மொழியில் வெளியாகி சூப்பர்ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானில் ஒரு பரதேசி சாமியாராக திரியும் தனுஷ், பாரீஸ் போய் ஆணிப்படுக்கை…

Read More

ஜெனிஃபரைக் கட்டிக்கிட்டா 350 கோடி..?

ஜெனிஃபரைக் கட்டிக்கிட்டா 350 கோடி..?

நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா போன்ற திறமைசாலி நடிகைகள் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதையே பெரிய விஷயமாக வாய் கிழியப் பேசுகிறோம். இப்போது ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் தகவல்படி இந்த ஆண்டு அதிக வருமானம் பெறும் நடிகை அழகுப்புயல், ‘த ஹங்கர் கேம்ஸ்’ நாயகியான ஜெனிஃபர் லாரன்ஸ். அவரது இந்த ஆண்டு வருமானம் 52 மில்லியன் டாலராம். இதுதவிர படங்களின் வருமானத்தில் பங்கும் உண்டு. இந்த அளவுக்கு சம்பளம் ஒரு நடிகை வாங்குவது முதல் முறையாக கருதப்படுகிறது. இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் நம்ம அழகு தேவதை ஜெனிஃபர் லாரன்ஸ், அடுத்த வருடம் இந்த சாதனையையும் முறியடிப்பார் என்கிறார்கள். கடந்த வருடம் 51 மில்லியன் வாங்கி முதலிடத்தில் இருந்த ’பாட்டி’ சாண்ட்ரா புல்லக் இப்போது வெறுமனே 8 மில்லியன் மட்டுமே வாங்குகிறார். இப்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார் ‘அயர்ன்…

Read More

சேட்டைக்கார பாட்டி – பிரத்யேக அதிர்ச்சிப் படம் உள்ளே

சேட்டைக்கார பாட்டி – பிரத்யேக அதிர்ச்சிப் படம் உள்ளே

57 வயதில் எசகுபிசகு போஸ் தரும் ஷரான் ஸ்டோன்:  ஐம்பதிலும் ஆசை வரும்னு நம்மாளுங்க பாட்டுப் பாடுறது நிஜம் என்பதை அவ்வப்போது ஹாலிவுட் ஆட்கள்தான் நிரூபித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த ஷரோன் ஸ்டோன்,  மீண்டும் இப்போது பத்திரிகைகளின் லைம்லைட்டிற்கு வந்திருக்கிறார். இப்போது அவர் வயது 57 என்பதும், இந்த வயதில் என்ன சேட்டை செய்திருக்கிறார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளவில்லை என்றால் சினிமா உலகம் மன்னிக்காது. அர்னால்டு நடித்த டோட்டல் ரிகால் படத்தின் மூலம் அனைவருக்கும் அறிமுகமாகி இருந்தாலும், பேஸிக் இன்ஸ்டிண்ட் படம்தான் ஷரானை உலகப்புகழ் பெறச்செய்தது. அகில உலக ஆண்களையும் தட்டியெழுப்பும் கவர்ச்சிக்கன்னியான ஷரான் ஸ்டோனை சாதாரண கவர்ச்சிக் கன்னி என்று புறம் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் அவ்வப்போது விவகாரமான கவர்ச்சிப் படங்களை பத்திரிகைகளில் வெளிவரச் செய்து எந்த நேரமும் பரபரப்புக்கு இடையிலேயே…

Read More

சிவாஜி கணேசனுக்கு அவமானம்!

சிவாஜி கணேசனுக்கு அவமானம்!

அன்னை இல்லத்தை மணி மண்டபம் ஆக்கலாமே… ஆளும் அ.தி.மு.க-வை தவிர அத்தனை கட்சிகளும் சேர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டியே தீரவேண்டும் என்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் மாபெரும் சினிமா கலைஞனை, இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது. விருது, புகழ், பணம் எல்லாம் தானாக வரவேண்டுமே தவிர, தேடிப்போகக் கூடாது என்பதில் சிவாஜி கணேசனே உறுதியாக இருந்தவர். இன்று அவரது பெயரைச் சொல்லி, அவ்வப்போது காமெடி ஷோ நடத்துகிறார்கள். மணி மண்டபம் மட்டுமல்ல, அதைவிட அற்புதமான மியூசியம் அமைப்பதற்கே தகுதியான நபர் சிவாஜி கணேசன் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இந்த விஷயத்துக்காக அரசாங்கத்தைக் கெஞ்சத்தான் வேண்டுமா? சிவாஜி கணேசனுக்கு பிறந்த நாள் அல்லது மறைவு நாள் வரும் நேரத்தில் மட்டும்தான் நம் கலைஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தக் கோரிக்கை…

Read More

பாகுபலியிடம் பாடம் படிப்பாரா ஷங்கர்?

பாகுபலியிடம் பாடம் படிப்பாரா ஷங்கர்?

இதுதாண்டா பிரமாண்டம்: திரையிடப்பட்ட மூன்று தினங்களில் டாப் 10 யு.எஸ். பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் பட்டியலில் முதன்முதலாக இடம்பிடித்து 3.5 மில்லியன் டாலர் அள்ளியிருக்கிறது பாகுபலி திரைப்படம். அமெரிக்க மண்ணில் மட்டும் நிகழ்த்தியிருக்கும் இந்த சாதனையைத் தொடர்ந்து, இந்தியாவிலும் பாகுபலி பல்வேறு சாதனைகளையும் முறியடிக்கும் என்றே நம்பப்படுகிறது. இதுவரையிலும் பிரமாண்டம் என்றால் ஷங்கர் என்று நினைத்துக்கொண்டிருந்த அறிவுஜீவுகளுக்கு நிஜமான பிரமாண்டத்தைக் காட்டிவிட்டார் இயக்குனர் ராஜமெளலி. எருமை மாட்டுக்கு பெயிண்ட் அடிப்பது, ஆயிரத்தெட்டு தொப்பையர்களை ஆடவிடுவது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் பூச்செடிகளை கிராஃபிக்ஸ் மூலம் வளர்த்துக்காட்டுவது, ஆங்கிலப்படங்களைக் காப்பியடித்து அதேபாணியில் அச்சுபிசகாமல் சண்டைக் காட்சி அமைப்பது இனியும் செல்லுபடியாகாது என்பதை ஷங்கர் புரிந்துகொள்ள வேண்டும். சிறந்த கதைகளைத் தேர்வு செய்வதிலும், அதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைப்பதிலும் ஷங்கர் கைதேர்ந்தவர் என்றாலும், இந்த பிரமாண்டங்களின் பிடியில் சிக்கித்தான் சின்னாபின்னாமாகி…

Read More

சிம்புவின் எதிரிகள் யார்?

சிம்புவின் எதிரிகள் யார்?

நடிகர் சங்கத் தேர்தலில் பழம் தின்று கொட்டை போட்ட ராதாரவி, சரத்குமார் போன்றவர்கள் ஒருபக்கம் நிற்க, விஷால், நாசர் போன்றவர்கள் நேருக்கு நேராக நின்று எதிர்ப்புக்குரல் கொடுக்கிறார்கள். இது வரவேற்கத்தகுந்த நிகழ்வுதான். நடிகர்களுக்குள் மோதல் சகஜம் என்ற நிலையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்திருக்கும் டி.ராஜேந்தர், அவரது மகன் சிலம்பரசனுக்கு எதிராக சிறு கும்பல் சதி  செய்வதாகவும், அதனால்தான் ‘வாலு’, ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்கள் வெளிவர முடியாமல் தவிப்பதாகவும் வழக்கம்போல் அழுது புலம்பி மக்களிடையே அனுதாபம் பெற முயற்சி செய்திருக்கிறார். நான் கருணாநிதியை எதிர்த்தவன், ஜெயலலிதாவுடன் சண்டை போட்டவன், ஒபாமாவை வம்புக்கு இழுத்தவன் என்றெல்லாம் சவடால் பேசும் தைரியசாலியான ராஜேந்தர், ஏன் இப்போது அந்த சிறு கும்பலின் பெயரை வெளிப்படையாக சொல்வதற்கு பயப்படுகிறார் என்பதுதான் ஆச்சர்யம். ‘வாலு’ போன்ற படங்கள் வந்தால் தமிழ் சினிமாவின் சரித்திரம்…

Read More

காற்றில் கரைந்த இசை – ஜேம்ஸ் ஹார்னெர்

காற்றில் கரைந்த இசை – ஜேம்ஸ் ஹார்னெர்

டைட்டானிக் கப்பலின் நுனிமுனியில் ஏறிநின்று ஜாக் – ரோஸ் இருவரும் பறவையைப் போல் கைகளை நீட்டியதும் ஒரு இசை ஜில்லென்று வருடிச்செல்லும்… படம் பார்க்கும் ஒவ்வொருவரும் பறப்பதுபோலவே இருக்கும். காற்றை கிழித்துச்செல்லும் அந்த இசை இப்போதும் உங்கள் காதில் ஒலிக்கிறதா… ரோஸை பத்திரமாக ஒரு கட்டையின் மீது ஏற்றிவிட்டு தண்ணீருக்குள் ஜாக் உயிர்ப் போராட்டம் நடத்துவான். அப்போது வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து ஒற்றைக்குரலில் பாடுவாள் ரோஸ். அந்த இசை  நம் உயிரை உரசும். டைட்டானிக் கப்பலின் பிரமாண்டத்தைக் காட்டும் ஆரம்ப காட்சியிலும், அது உடைந்துவிழும் நேரத்திலும் படத்துடன் ரசிகர்களை ஒன்றவைத்ததில் இசைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தப் படத்தின் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் பரிட்சயமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னெர், விமான விபத்தில் சிக்கி ஒரே நொடியில் காற்றில் கலந்து மறைந்தே போய்விட்டார். 1953-ம் ஆண்டு லாஸ்…

Read More

ஏய், அவளா நீ? டேப்பில் சிக்கிய கிறிஸ்டன்

ஏய், அவளா நீ? டேப்பில் சிக்கிய கிறிஸ்டன்

கிறிஸ்டனை போட்டுக்கொடுத்த மம்மி ‘ட்விலைட்’ ஹீரோயின் கிறிஸ்டன் ஸ்டுவர்ட்டுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. தன்னுடைய அழகாலும் இளமையாலும் இளசுகளை கிறங்கடிப்பவர்.  நம்ம நயன்தாரா மாதிரி எல்லா நேரங்களிலும் ஏதாவது ஒரு செய்தி அவரைப் பற்றி பரபரவென சுற்றிக்கொண்டு இருக்கும். எந்தப் படத்தில் நடித்தாலும் அந்தப் படத்தின் இயக்குநர் அல்லது நடிகருடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவார். இருவரும் அங்கே சுற்றினார்கள், இங்கே தங்கினார்கள் என்று பேசப்படும். ஆனால் அடுத்த படத்துக்குப் போனதும் பழைய கிசுகிசு மறைந்து, புதிதாக ஒரு காதல் பறந்துவரும். அந்த வகையில் இதுவரையிலும் ’டுவ்லைட்’ ராபர்ட் பேட்டிசன், ’ஸ்னோவைட்’ ரூபெர்ட் சாண்டர்ஸ்,  பில்லி ஃப்ரூக் போன்ற பலருடன் காதல் என்று கிசுகிசு இருந்தாலும், எந்தக் காதலும் கிறிஸ்டனுக்கு நிரந்தரமாக தாக்குப் பிடிக்கவில்லை. ’எனக்கு இயல்பாக இருக்கப்பிடிக்கும், பொய்யாக நடிப்பவர்களை காதலிக்கப் பிடிக்காது’ என்று உறவு முறிவுக்கு ஆயிரத்தெட்டு காரணங்களை…

Read More

என்னாது, டெய்லர் ஸ்விப்ட்டை ஏமாத்திட்டாளுகளா?

என்னாது, டெய்லர் ஸ்விப்ட்டை ஏமாத்திட்டாளுகளா?

பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டுக்கு எந்த முன்னுரையும் எழுதத் தேவையில்லை. ஏனென்றால் குரலைவிட அத்தனை அழகை அள்ளிக் கொடுத்திருக்கிறான் அந்த ஆண்டவன். கூகிள் ஆண்டவரைத் தட்டிப்பார்த்தால் ஏகப்பட்ட கெட்ட படங்கள் கொட்டிக்கிடக்கும். அதனால் தன்னுடைய இமேஜ் பாதிப்படைகிறது என்று, தனது படங்களை மட்டும் பிரத்யேகமாக ஏற்றியிருந்த இரண்டு வலைதளங்களை மட்டும் விலைபேசி வாங்கி மூடி பரபரப்பைக் கிளப்பினார். இப்போது வெளியாகியிருக்கும் அவரது ’பேட் பிளட்’ மியூசிக் வீடியோ பெரும் ஹிட் அடிக்கவில்லை என்றாலும்  உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. ஏன் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம். இசை, பாடல் வரிகள் மற்றும் எடிட்டிங்கிற்காக பேசப்படவில்லை என்றாலும் ஒரு பெண்னின் பெயரைத் தேடுகிறார்கள்  என்பதுதான் பரபரப்புக்குக் காரணம். இதை ஸ்விப்ட் ஓப்பனாகவே அறிவித்திருக்கிறார். ‘என் எதிரியின் பெயரை மறைமுகமாக அம்பலப்படுத்தி இருக்கிறேன். அதுவும் குறிப்பாக சில சமயம் மட்டும் பழகும் ஒரு பெண் தோழியை பட்றிதான்…

Read More