கிக் இல்லாத பெக் – தெறி விமர்சனம் 38 மார்க் (Theri Review)

கிக் இல்லாத பெக் – தெறி விமர்சனம் 38 மார்க் (Theri Review)

ஜஸ்ட் வாட்ச் – தெறி: ஏசி பார், விதவிதமான சைடீஸ், காஸ்ட்லி சரக்கு, கம்பெனிக்கு நாலு ஃப்ர்ண்ட்ஸ் – இத்தனை இருந்தும் அடிக்க அடிக்க போதையே ஏறலைன்னா எப்படியிருக்கும் – தெறி படம் மாதிரி இருக்கும். அதிரடிக்கு விஜய், நைனிகா, கிளுகிளுப்புக்கு சமந்தா, எமி ஜாக்சன், சென்டிமென்ட்டுக்கு ராதிகா, பிரபு, அசத்தலுக்கு ஜி.வி.பிரகாஷ் என எத்தனையோ இருந்தும் கதையும் திரைக்கதையும் தொங்குதேப்பா… கொஞ்சம் சத்ரியன், கொஞ்சம் பாட்ஷா, கொஞ்சம் மதுர என மூன்று படங்களிலும் இம்ப்ரஸ்(?) ஆகி மூன்று விஜய்க்கு வேலை கொடுத்திருக்கிறார்கள். சினிமா இலக்கணப்படி அம்மா இல்லாத நைனிகாவை (நடிகை மீனாவின் மகள்) கண்ணுக்குள் வைத்து வளர்க்கிறார் ஜோசப் (விஜய்). பொண்டாட்டி இல்லாமல் ஒரு வாலிபன் இந்த உலகத்தில் தனியே இருக்க முடியுமா என்ன? நைனிகா படிக்கும் ஸ்கூலில் டீச்சராக இருக்கும் ஏமி ஜாக்சன், விஜயை…

Read More

கடவுளைவிட காதல் மேலானது – பாஜிராவ் மஸ்தானி

கடவுளைவிட காதல் மேலானது – பாஜிராவ் மஸ்தானி

பாக்காம விட்றாதீங்க – பாஜிராவ் மஸ்தானி: காதல் என்பது அமிர்தமும் அமிலமும் கலந்த மழை. எப்போது, எப்படி, யார் மீது பொழியும் என்று தெரியாது. ஆனால் காதல் மழையில் சிக்கியவர்கள் மீண்டதாக சரித்திரம் இல்லை. அப்படித்தான் திருமணம் முடிந்து மனைவியின் மீது மகாபிரியமுடன் இருக்கும் ஒரு போராளிக்கு திடீரென காதல் வருகிறது. அதன்பிறகு அவன் என்னவாகிறான் என்பதுதான் பாஜிராவ் மஸ்தானி என்ற வரலாற்று கதை. இப்போது வித்தியாசமான திரைக்கதையும் பிரமாண்டமும் மட்டுமே சினிமாவாக ரசிக்கப்படுகிறது. அதனால் காலத்திற்கேற்ப மிகவும் எளிமையான ஒரு கதையை, பிரமாண்ட படைப்பாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதையைத் தொடங்கி, க்ளைமாக்ஸ் மட்டும் தன்னுடைய கற்பனைக்கு படமாக்கியிருக்கிறார் பன்சாலி. சத்ரபதி ஷாஹூவின் அரண்மனையில் அடுத்த பீஷ்வா யார் என்ற விவாதம் நடக்கிறது. தந்தைக்குப் பிறகு அந்தப் பதவி…

Read More

மலையாள காதல் கோட்டை – சார்லி (Charlie) – Malayalam Movie

மலையாள காதல் கோட்டை – சார்லி (Charlie) – Malayalam Movie

பாக்காம விட்றாதீங்க – சார்லி: படம் முழுவதும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமல், கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே காதலர்கள் ஒன்றுசேர்வது தமிழுக்கு பழசு என்றாலும், நெஞ்சை அள்ளும் வகையில் இளமை கொஞ்சுகிறது மலையாள சார்லி. கதை இல்லாவிட்டாலும் ரசனையான திரைக்கதையால் துருதுரு துல்கரும், படபட பார்வதியும் கிறங்கவைக்கிறார்கள். வீட்டுக்கு உருப்படாத பிள்ளையாக கருதப்படும் பார்வதி, கட்டுக்கோப்பான குடும்பம், கல்யாணம், குழந்தை என்றெல்லாம் இல்லாமல் புதுசாக வாழ ஆசைப்படுகிறாள். கல்யாண ஏற்பாடு நடப்பது தெரிந்ததும் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு வெளியேறுகிறாள். ஒரு மேன்ஷனில் முன்பு துல்கர் தங்கியிருந்த அறையில் பார்வதி தங்குகிறாள். கலைப்பொருட்களின் குப்பைக்கூடமாக கிடக்கும் அந்த அறையைக் கண்டு களேபரமாகிறாள். அதனை சுத்தப்படுத்த முயற்சிக்கும்போது ஒவ்வொரு பொருளும் அவளுக்கு புதுப்புது அர்த்தம் கொடுக்கிறது. அங்கே கிடைக்கும் ஒரு ஓவியக் கதையை படித்து ஆச்சர்யத்தில் மூழ்குகிறாள். அந்தக் கதை இப்படித்தான் இருக்கிறது. துல்கர்…

Read More

மூன்று பஞ்சு மிட்டாய்கள் – பிரேமம் (Premam)

மூன்று பஞ்சு மிட்டாய்கள் – பிரேமம் (Premam)

ஜஸ்ட் வாட்ச் – பிரேமம்: அழுத்தமான கதைக்கு இலக்கணமாக மலையாள சினிமா இருந்த காலம் மலையேறிப் போயாச்சு. இன்றைய இளைஞர்களைக் கவர்வதற்கு அழகான புதுமுகப் பெண்களும், ஜாலியான திரைக்கதையும் இருந்தாலே போதும் என்று பிரேமம் படம் மூலம் சொல்லியடித்து ஜெயித்திருக்கிறார் அல்போன்ஸ் புத்ரன். கதை என்று எதுவுமே இல்லை என்றாலும் அழகுப் புயல்களாக வலம் வரும் முன்று தேவதைகளுக்காக மட்டுமே பார்க்கலாம் பிரேமம். நம்ம சேரன் கைவண்ணத்தில் வெளியான ஆட்டோகிராப்பின் மலிவுப் பதிப்பு என்றும் பிரேமத்தை சொல்லலாம். கேரளாவை கலக்கிக்கொண்டிருந்த இளம் நடிகர்  பகத் பாசிலை (நஸ்ரியாவை தள்ளிக்கொண்டு போனவர்) பின்னுக்குத் தள்ளிவிட்டு, வேகமாக முன்னேறிவரும் நிவின் பாலி நாயகனாக படம் முழுவதும் மூன்று கெட்டப்களில் வலம் வருகிறார். மீசை இல்லாத பள்ளி வயதில் குட்டிப் புயலாக வரும் அனுபமா பரமேஸ்வரன் அழகில் மயங்குகிறார். செல்ல நாய்க்குட்டி…

Read More

இந்தியாவின் கோரமுகம் – Haider Movie Review

இந்தியாவின் கோரமுகம் – Haider Movie Review

பாக்காம விட்றாதீங்க – ஹெய்தர்:  நம் இந்தியா போன்ற சுகமான தேசம் எதுவுமில்லை என்பவர்கள், ஒரே ஒரு நாளாவாது காஷ்மீரியாக பதட்டத்துடன் வாழ்ந்து பார்க்கவேண்டும். எவரும் தீவிரவாதியாக பிறப்பதில்லை என்றாலும், காஷ்மீரின்  இயற்கை அழகை மீறி அங்கே நாளுக்குநாள் வன்முறைகள்  அதிகரிக்கின்றன. துப்பாக்கி ஏந்தும் ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் இருக்கிறது… ஆனால் தீர்வுதான் இல்லை என்பதை நெத்தியடியாகச் சொல்லும் படம் ஹெய்தர். வன்முறை அரங்கேறும் இடங்களில் எல்லாம் பெண்கள் கைப்பாவையாகத்தான் இருக்கமுடிகிறது. ஆண்களின் துணிச்சலும் கோபமும் ஆசையும் அவர்களை அடிமையாக்கிவிடுகின்றன. இந்த வகையில் ஒரு சோரம்போன தாயின் கதை என்றும் ஹெய்தரை சொல்லலாம். பனிப்பொழிவை மீறி துப்பாக்கி சத்தம் கேட்கும் காஷ்மீருக்குள் நுழையலாமா? ஒரு மருத்துவராக,  தீவிரவாத குழுவின் தலைவன் ஒருவனுக்கு அப்பன்டிக்ஸ் ஆபரேசன் செய்யவேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் டாக்டர் ஹிலால் மீர். அவருடைய வீட்டில் வைத்து…

Read More

ஏமாத்திட்டாரே நிவின் பாலி

ஏமாத்திட்டாரே நிவின் பாலி

பாக்கவே பாக்காதீங்க – ஒரு வடக்கன் செல்பி இந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்திருக்கும் ஒரு வடக்கன் செல்பி படத்தை ஆஹா..ஓஹோ என்று கொண்டாடுகிறது மலையாளத் திரையுலகம். ஐந்து மொழிகளில் இந்தத் திரைப்படம் ரீமேக் செய்யப்படவும் இருக்கிறதாம். மலையாளத்தின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்துவரும் நிவின்பாலி நடித்தபடம் என்று ஆர்வமாக உட்கார்ந்தால், உப்பும் உறைப்பும் இல்லாத ஊறுகாய் போலஇருக்கிறது. செல்பி எடுப்பதன் விபரீதம், ஃபேஸ்புக் சிக்கல் போன்றவற்றை எல்லாம் கடுமையான விமர்சனம் செய்வதாக கதையளக்கிறார்கள்.. வங்கிக்கடனில் இன்ஜினியரிங் மாணவராக இருக்கும் நிவின்பாலி, படிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் சந்தோஷமாக செய்கிறார். அதனால் படிப்பு முடியும்போது மொத்தமே 42 அரியர்ஸ் இருக்கிறது. ஆனாலும் அதைப்பற்றிய கவலை எதுவும் இல்லாமல் பெண்களை சைட் அடிப்பதை சைட்ஜாப்பாக செய்து வருகிறார். தாய், தந்தையுடன் பேசும்போதும் பெண்களை ஓரமாகப் பார்த்து ஜொள்ளுவிடுகிறார்….

Read More

பாகுபலி – விமர்சனம் (Bahubali – Review) டெக்னிக்கல் மிரட்டல்… திரைக்கதை தடங்கல்

பாகுபலி – விமர்சனம் (Bahubali – Review) டெக்னிக்கல் மிரட்டல்… திரைக்கதை தடங்கல்

மொழியைத் தாண்டி ரசிக்கக்கூடியது சினிமா. அதனால்தான் ராஜமெளலி எந்த ஊர்க்காரர் என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தமிழ் ரசிகர்களும் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். மஹாதீரா,  நான் ஈ பட வரிசையில் அகில இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி, முக்கால் கிணறுதான் தாண்டியிருக்கிறது. ஆனாலும் டெக்னிக்கலாக மிரட்டி… ரசிகனை திறந்த வாய் மூடாமல் பார்க்க வைத்திருக்கிறார். இதுவரை கற்பனை கதைகளை மட்டுமே இயக்கிவந்த மெளலி, முதன்முறையாக வரலாற்றுக் கதையைத் தொட்டிருக்கிறார். ஜைன மதத்தின் தொடக்கம் என்பது முழு வரலாறாக பதிவு செய்யப்படாத காற்றுவழிச் செய்தி என்பதால், பாகுபலி வரலாற்றில் தன்னுடைய காதல் கதையை இடைச்செருகலாக நுழைத்து சுவாரஸ்யம் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆரம்பத்திலும் இடம்பெறும் 10 நிமிட காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்துவிடும். அப்படித்தான் அதிரடியாக தொடங்குகிறது படம். அரச வாரிசு பாகுபலியை எதிரிகளிடம்…

Read More