தமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016 அவார்ட்ஸ்

தமிழ் ஹாலிவுட் வழங்கும் 2016  அவார்ட்ஸ்

இந்த ஆண்டு இந்தி சினிமாவுக்கு வசூல் ரீதியில் நல்ல காலம் என்றுதான் சொல்லவேண்டும். படம் குப்பையாக இருந்தாலும் முதல் வாரத்திலேயே நிறைய படங்கள் வசூல் அள்ளிவிட்டன. ஆண்டு இறுதியில் வந்த அமீர்கானின் டங்கல் ஏராளமான விருதுகளை அள்ளியிருக்கிறது. ஹிரித்திக் ரோஷன் நடித்த மொகஞ்சதாரோ கேவலமான பட லிஸ்டில் சேர்ந்திருக்கிறது. இனியாவது அப்படிப்பட்ட முயற்சியில் அவர் இறங்காமல் இருந்தால் சரிதான். இதோ தமிழ் ஹாலிவுட் வழங்கும் ஹிந்தி சினிமா 2016ம் ஆண்டுக்கான சினிமா விருதுகள் இதோ… வெற்றிபெற்ற அனைவருக்கும் தமிழ் ஹாலிவுட் புத்தாண்டு வாழ்த்துகள்… ஹிந்தி சினிமா 2016ம் சினிமா விருதுகள் சிறந்த படம் : Dangal சிறந்த நடிகர் : Aamir Khan ( Dangal) சிறந்த நடிகை : Alia Bhatt (Dear Zindagi,  Udta Punjab) சிறந்த இயக்குனர் : Nitesh Tiwari (Dangal)…

Read More

கலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்

கலகலப்பூ – சென்னை 28 (2) – 41 மதிப்பெண்கள்

இந்தியா ஜெயித்தாலும் தோற்றாலும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். அப்படியொரு அனுபவத்தை மீண்டும் கொடுத்திருக்கிறார் வெங்கட்பிரபு. கதைக்காக ரொம்பவும் மெனக்கெடாமல் வசனங்களாலும், கதாபாத்திரங்களாலும் கதையை நகர்த்தி ஜாலியான ஒரு மேட்ச் பார்த்த திருப்தியை கொடுத்துவிட்டார் என்பது மட்டும் உண்மை. முதல் பாகத்தில் வந்தவர்களில் பெரும்பாலோ, கிரிகெட்டை மறந்து குடும்பம், குட்டி என்று செட்டிலாகி இருக்கிறார்கள் என்பதை நீட்டிமுழக்கி சொல்வதாக, படம் ஆரம்பமாகிறது. அத்தனை பேரும் ஓன்றுசேர்ந்து ஜெய் கல்யாணத்துக்காக தேனி போனதும் கதை சூடு பிடிக்கிறது. திடீரென தேனியில் சந்திக்கும் பழைய நண்பன் அரவிந்திற்காக கிரிக்கெட் விளையாடத் தொடங்குகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டையே மறந்தவர்கள் அரையிறுதியில் அடித்து நொறுக்கிறார்கள். அதனால் கடுப்பாகும் ஊர் டீம் கேப்டன் வைபவ், சென்னை டீமை வெல்வதற்கு மறைமுகமாக திட்டம் போடுகிறான். சொப்பனசுந்தரியை வைத்து டீம் ஆட்களை மயக்கி போட்டோ எடுத்துவிடுகிறான்….

Read More

தற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)

தற்கொலைதான் வீரமா – மாவீரன் கிட்டு – 39 மார்க் (Maaveeran Kittu Movie Review)

எந்த ஓர் போராட்டத்துக்கும் தற்கொலை தீர்வு அல்ல. ஆனால் தற்கொலையை மாபெரும் தியாகம், மாவீரம் என்று சொல்வதால், சுசீந்திரன் சொல்லவந்த கருத்து அத்தனையும் அடிபட்டு போகிறது. அழுத்தம் திருத்தமாக சாதி பிரச்னையை பேசவேண்டும் என்பதற்காக 1987க்கு போயிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இன்றும் சாதிப் பிரச்னை உச்சத்தில் இருக்கும்போது, எதற்காக மெனக்கெட்டு அந்தக் காலகட்டத்தை தேர்வு செய்தார் என்பதுதான் ஆச்சர்யம். சாதி பிரச்னை எல்லாம் அந்தக் காலகட்டத்தில் மட்டும்தான் இருந்ததோ, இப்போது இல்லையோ என்ற மாய தோற்றத்தை இன்றைய நகரத்து இளசுகள் மத்தியில் விதைக்கும் அபாயம்  இந்தப் படத்தில் இருக்கிறது. உயர் சாதி மக்கள் வசிக்கும் பாதையில் கீழ் சாதி பிணம் போகக்கூடாது என்ற பிரச்னையுடன் படம் ஆரம்பமாகிறது. நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கினாலும், பிணம் மட்டுமே அந்த வழியில் போகும் நிலை ஏற்படுகிறது. இந்த நேரத்தில்தான் மாநிலத்திலேயே…

Read More

நிஜமான தெறி – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு (Action Hero Biju)

நிஜமான தெறி – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு (Action Hero Biju)

ஜஸ்ட் வாட்ச் – ஆக்‌ஷன் ஹீரோ பிஜு சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரியைவிட அதிகாரம் நிறைந்தவராக ஒரு சப்-இன்ஸ்பெக்டரை காட்டும் பலவீனமான லாஜிக் என்றாலும், தன்னுடைய மீசையால் படத்தை தூக்கி நிறுத்துகிறார் நிவின்பாலி.. மாஸ் ஹீரோவாக ஒவ்வொரு காட்சியிலும் பில்டப் கொடுப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இருந்தாலும், அடக்கிவாசித்தும் ஆக்‌ஷன் காட்டுகிறார். கதை என்று எதுவுமே இல்லாமல் அட்வைஸ் தோரணங்களை நீளமாக கட்டி, அதையே திரைக்கதையாக மாற்றிவிட்டார்கள். கதை இல்லாமல் இப்படி காட்சிகளாக  வைத்திருப்பதால், ஆரம்பத்தில் மட்டும் பிஜுவை ரவுடிகள் குத்துவதைக் காட்டிவிட்டு படத்தை ஆரம்பிக்கிறார்கள். படத்தின் தலைப்பு முழு கதையையும் சொல்லிவிடுகிறது. எதற்கும் அடங்காத, யாருக்கும் அடிபணியாத நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் பிஜுதான் நிவின். என் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் ஒரே ஒரு ரவுடி மட்டும்தான் இருக்கவேண்டும், அது நான்தான் என்கிறார் நிவின். அதனால் தவறு செய்யும் அத்தனை ரவுடிகளையும்…

Read More

ஏகப்பட்ட ஜோக்கர்ஸ் – 41 மதிப்பெண்கள் (Joker Movie Review)

ஏகப்பட்ட ஜோக்கர்ஸ் – 41 மதிப்பெண்கள் (Joker Movie Review)

ஒன்று அல்லது இரண்டு ஜோக்கர்களுடன் சீட்டு விளையாடத் தொடங்கினால், ஆட்டம் படு சுவாரஸ்யமாக இருக்கும். எடுக்கும் அத்தனை கார்டுகளும் ஜோக்கராக வந்துகொண்டே இருந்தால்… சந்தோஷப்படவும் முடியாமல் கீழே போடவும் முடியாமல் தடுமாற வேண்டும். அப்படி  பாராட்டவும் முடியாமல் திட்டவும் முடியாமல் குழப்பவைக்கும்   படம்தான் ஜோக்கர். மனநல தடுமாற்றத்தில் இருக்கும் மன்னர்மன்னனுக்கு சிகிச்சை அளிப்பதுதவிர அத்தனை காரியங்களிலும் பொன்னூஞ்சலும் இசையும் துணை நிற்கிறார்கள். கனவு ஜனாதிபதியாகவே மன்னர்மன்னன்  தொடரவேண்டும் என்பதுதான் அவர்களது ஆசையா என்ற எண்ணம் முதல் காட்சியிலே வந்துவிடுவதால், அடுத்தடுத்த காட்சிகள் எல்லாமே பட்டாசு தோரணமாகத்தான் தெரிகிறது. எஸ்.வி.சேகர் நாடகங்களில் ஆங்காங்கே கதைக்கு சம்பந்தமில்லாமல் டயலாக்கில் நகைச்சுவை தெறித்துக்கொண்டே இருப்பதுபோல், அரசாங்கத்திற்கு சாட்டையடி ஒவ்வொரு ஷாட்டிலும் விழுந்துகொண்டே இருக்கிறது. ஏன் இப்படி இருக்கிறார் மன்னர்மன்னன் என்ற கேள்விக்கு விடை வருகிறது. ஒரு தண்ணீர் நிறுவனத்தில் வேலை செய்யும்…

Read More

காதல் ஓட்டை – தட்டத்தின் மறையத்து (Thattathin Marayathu)

காதல் ஓட்டை – தட்டத்தின் மறையத்து (Thattathin Marayathu)

பாக்கவே பாக்காதீங்க – தட்டத்தின் மறையத்து மலையாளத்தில் சூப்பர்ஹிட் அடித்து, தமிழில் ரீமேக் ஆகும் தட்டத்தின் மறையத்து ஒரு படம் அல்ல… நல்ல பாடம். அதாவது காதல் படத்தை எப்படி எடுக்கக்கூடாது என்று விலாவாரியாக சொல்லிக்கொடுக்கும் பாடம். காதலிக்கச் சொன்னா கடுப்பேத்துறாங்க மை லார்டு என்ற அலற வைக்கும் அளவுக்கு முதல் காட்சி தொடங்கி கடைசி நொடி வரையிலும் காதல் பற்றி பேசிக்கொண்டே இருக்கும் திராபையான ஒரு படம்தான் தட்டத்தின் மறையத்து. போலீஸ் ஸ்டேஷனில் கைதியாக வைக்கப்பட்டிருக்கும் நிவின் பாலி பிளாஷ்பேக்கில் கதை சொல்கிறார். வேறு வேலைவெட்டி இல்லாத சப் இன்ஸ்பெக்டர் மனோஜ் கே.ஜெயனும் மற்ற காமெடி போலீஸாரும் சேர்ந்து கதை கேட்கிறார்கள். குட்டிப்  பையனாக இருக்கும்போதே வினோத் அதாங்க நம்ம நிவின் பாலி ஒரு அழகான இஸ்லாம் சிறுமி மீது ஆசைப்படுகிறார். அந்த சிறுமியை திருமணம்…

Read More

கவர்ச்சி நடிகையின் மகன் –   பாவாட விமர்சனம் – 36 மார்க் – Paavada (Malayalam Movie)

கவர்ச்சி நடிகையின் மகன் –   பாவாட விமர்சனம் – 36 மார்க் – Paavada (Malayalam Movie)

பெற்ற தாயை கவர்ச்சி நடிகையாக பார்க்கும் மகனின் அவலத்தை சித்தரிக்கும் வகையில் பாவாட புத்தம்புது முயற்சி. ஆனால் காட்சிக்குக் காட்சி திரைக்கு வெளியேயும்  நாத்தமடிக்கும் அளவுக்கு குடிப்பதும்,  ஜவ்வு மிட்டாய் மாதிரி  தேவையில்லாமல காட்சிகளை திணித்திருப்பதும் பொறுமையை சோதிக்கின்றன. குடிப்பதற்காக தலையைக்கூட அடகுவைக்கும் அளவுக்கு மொடா குடியன் ஜாய். சில்லறை வேலைகளை செய்து சம்பாதிக்கும் பணத்தை இரண்டு விஷயத்துக்காக மட்டும்தான் செலவழிக்கிறான். ஒன்று குடி. அடுத்ததும் குடி. இப்படிப்பட்ட சூழலில் நர்ஸாக இருக்கும் சினிமோல் மீது காதல் வசப்படுகிறான். சினிமா இலக்கணப்படி குடிகாரனாக இருந்தாலும்,  காதல் சீக்கிரமாக கனிந்து கல்யாணத்தில் முடிகிறது. ஜாய் பாத்திரத்திற்கு பிரித்விராஜும், சினிமோலுக்கு மியா ஜார்ஜும் கனகச்சிதமாக பொருந்துகிறார்கள். குடிகாரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல், கடவுளிடம் தனியே பேசும் மியாவிற்கு, யாருடனோ கள்ளத்தொடர்பு என்று சந்தேகப்படுகிறான் ஜாய். தன்னை கணவர் சந்தேகப்பட்டு திருட்டுத்தனமாக வேவு பார்ப்பது…

Read More

லாஜிக் இல்லாத ஃபேன் – Fan Review – 36 மார்க்

லாஜிக் இல்லாத ஃபேன் – Fan Review – 36 மார்க்

ஜஸ்ட் வாட்ச் – ஃபேன்: வித்தியாசமான ஒரு வரிக் கதை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் லாஜிக்கை பற்றி கவலைப்படாத திரைக்கதையும், முழுக்க முழுக்க ஷாருக் மட்டுமே திரையில் தெரிவதும், கதாநாயகி என்ற சந்தோஷம் இல்லை என்பதாலும்  –  நெய் ரோஸ்ட் போன்று மொறுமொறுவென்று வந்திருக்கவேண்டிய சினிமா, வயிற்றைப் பிரட்டும் செட் தோசை போல் எரிச்சலூட்டுகிறது. ஆர்யன் கன்னாவின் கட் அவுட்டிற்கு சூடம் ஏற்றி  பால் அபிஷேகம், தேன் அபிஷேகம் செய்யும் அளவுக்கு வெறிபிடித்த ரசிகன்  கெளரவ். ஆர்யன் மீதான அபிமானத்தால் தன்னுடைய ஸ்டைல், உடை, பேச்சு எல்லாவற்றையும் ஆர்யன் போலவே மாற்றிக்கொள்கிறான் கெளரவ். டெல்லியில் நடைபெறும் விழா ஒன்றில் ஆர்யன் போலவே நடித்து முதல் பரிசு பெறுகிறான் கெளரவ். குடும்பத்தினரும் கெளரவ் நடவடிக்கைகளைப் பார்த்து ஆனந்தப்படுவதுடன் ஆதரவும்(?) தருகிறார்கள். ரசிகன் இல்லையென்றால் நான் இல்லை என்று…

Read More

ஆங்கில பட பாணியில் ‘சங்குசக்கரம்'; Tamil movie Hollywood style – ‘Sanguchakkaram’

ஆங்கில பட பாணியில் ‘சங்குசக்கரம்'; Tamil movie Hollywood style – ‘Sanguchakkaram’

ஆங்கில பட பாணியில் சங்குசக்கரம் – In continuation to the success of ‘Naduvula Konjam Pakkatha Kaanom‘ & ‘Idharkuthane Aasaipattai Balakumara‘ comes a brand new Tamil movie Hollywood style – ‘Sanguchakkaram’. சினிமா பற்றி ஒவ்வொரு செய்தியாக கசியவிடும் ஹாலிவுட் பாணியில், சங்குசக்கரம் படத்திற்கு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில பட பாணியில் மிரட்டும் இந்த போஸ்டரை 24AM நிறுவனத்தை சேர்ந்த ட்யுனி ஜார்ஜ் (Tuney George) டிசைன் செய்திருக்கிறார். ஜில்லா, பிரேமம், மங்காத்தா, மெட்ராஸ், ரஜினி முருகன் போன்ற படங்களுக்கு இந்த நிறுவனம்தான் டிசைன் செய்தார்கள். இப்போது விக்ரம் நடிக்கும் இருமுகன் மற்றும் சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களுக்கும் பட்டையை கிளப்புகிறார்கள். பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவும் அவரது தம்பியும் பிரபல நடிகருமான பிரேம்ஜி அமரனும் இந்த போஸ்டர்களை ட்விட்டரில் வெளியிட்டு பரபரப்பை…

Read More

மீண்டும் ஒரு த்ரிஷ்யம் – புதிய நியமம் – 39 மார்க் – Puthiya Niyamam

மீண்டும் ஒரு த்ரிஷ்யம் – புதிய நியமம் – 39 மார்க் – Puthiya Niyamam

ஜஸ்ட் வாட்ச் – புதிய நியமம்: பேய் பட ஃபார்முலாவை தமிழ் பட உலகம் தொங்கிக்கொண்டிருக்க, வித்தியாசமான திரைக்கதையுடன் கூடிய த்ரிஷ்யம் ஸ்டைல் படங்கள் மலையாளத்தில் வரிசை கட்டுகின்றன. சமீபத்தில் ஹிட் அடித்திருக்கும் த்ரில்லர் படம் புதிய நியமம். தமிழ் அய்யர் பெண்  வாசுகியாக வரும் நயன்தாராவும் மலையாளி லூயிஸ் போத்தனாக வரும் மம்முட்டியும் காதலித்து திருமணம் செய்து, அதற்கு சாட்சியாக ஒரு பெண் பிள்ளையுடன் அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள். கதகளி ஆர்ட்டிஸ்ட் வாசுகி கையில் கட்டுடன் வீட்டு வேலை செய்வதில் படம் ஆரம்பமாகிறது. தொலைக்காட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராகவும் விவாகரத்து கேஸ் மட்டுமே எடுத்து வாதாடும் வழக்கறிஞராகவும் வரும் லூயிஸ் மிகவும் கூல் பெர்சனாலிட்டி. ஆனால் வாசுகி சிடுசிடு. அம்மாவின் நடவடிக்கையில்  மாற்றங்களை கண்டு எரிச்சலாகிறாள் மகள் சிந்த்தா. எந்த நேரமும் விவாகரத்து, கள்ளக்காதல் பற்றி அப்பா போனில் பேசுவதைக்…

Read More